சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., அபகரித்த மனைவியை மீட்க தொழிலாளி போராட்டம்

Added : செப் 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement

துாத்துக்குடி, எஸ்.ஐ. அபகரித்துச் சென்ற மனைவியை மீட்டுத்தர வலியுறுத்தி கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மும்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 47. நேற்று கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்த இவர் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.பின் தலைமை எழுத்தர் நிஷாந்தினியிடம் அவர் அளித்த மனு:எனக்கும் ராமலட்சுமி 38 என்பவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. 2018 நவ. 15ல் கருப்பசாமி என்ற எஸ்.ஐ. என் மனைவி ராமலட்சுமியை உறவினர் என்ற போர்வையில் வந்து அழைத்து சென்று விட்டார்.நான் அளித்த புகாரை கடம்பூர் போலீசார் ஏற்கவில்லை. ஜன. 24-ல் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. நானும் என் பிள்ளைகளும் மிரட்டப்பட்டோம். இந்நிலையில் என்னை ஒரு கொலை வழக்கில் கைது செய்து நெல்லை சிறையில் அடைத்தனர்.அப்போது என் வீட்டுக்கு வந்த எஸ்.ஐ. கருப்பசாமி வீட்டிலிருந்த 26 சவரன் நகை 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விளை பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் 18 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டார். கடந்த 8ம் தேதி கருப்பசாமி மற்றொரு எஸ்.ஐ.யுடன் வந்து என்னை தாக்கி காயப்படுத்தினார். எனக்கு போலீசாரால் பல கஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே உரிய விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-செப்-201911:34:33 IST Report Abuse
Bhaskaran அவர் அந்த அதிகாரியுடன் விருப்பப்பட்டு போயிருந்தா யாரும் எதுவும் செய்யமுடியாது ஐயா
Rate this:
Share this comment
Prem - ,
21-செப்-201921:08:49 IST Report Abuse
PremUnga wife na vitruveengla?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X