சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நைஜீரிய வாலிபர் மாமல்லபுரத்தில் கைது

Added : செப் 20, 2019
Advertisement
நைஜீரிய வாலிபர் மாமல்லபுரத்தில் கைது

மாமல்லபுரம், கல்பாக்கம் அணுசக்தி வளாகம் அருகே ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கிய நைஜீரிய நாட்டு வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் அடுத்த மாதம் மாமல்லபுரம்சுற்றுலா வருகின்றனர்.இவர்களின் பாதுகாப்பு கருதி மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் போலீசார் வீடுதோறும் சென்று வீட்டில் வசிப்பவர் அவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கின்றனர்.கல்பாக்கம் அணுசக்தி வளாக வடபுற நுழைவாயில் அருகாமை வெண்புருஷம் மீனவப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இப்பணியில் ஈடுபட்டனர்.மாமல்லபுரம் முன்னாள் வார்டு உறுப்பினர் தேசிங்கு மகன் நாகமுத்து வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு நபர் குறித்து விசாரித்தனர்.அவர் நைஜீரியா நாட்டின் சுக்குவா ஓன்வுமர் செப்பானியா 36 என்பதும் பாஸ்போர்ட் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி சில ஆண்டுகளாக இங்கு தங்கியிருந்ததும் தெரிந்தது.இது குறித்து மாமல்லபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் நைஜீரியா நாட்டு வாலிபரை கைது செய்தனர். இவர் வசித்தது அரசு திட்ட பசுமை வீடு என கூறப்படுகிறது.அணுசக்தி வளாக நுழைவு 0.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நிலையில் இப்பகுதியில் வெளிநாட்டு நபர் நீண்டகாலம் தங்கியதை உள்ளூர் போலீசார் அறியாமல் இருந்தனரா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X