பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் தொழில், 'பரமபதம்' மாணவ - மாணவியர் புதுமை

Added : செப் 21, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
 திருப்பூர், தொழில் நிலை, பரமபதம்,முயற்சி என்ற ஏணி

திருப்பூர்:திருப்பூர் தொழில் நிலையை மையமாக வைத்து, பரமபத விளையாட்டை, கல்லுாரி மாணவ - மாணவியர் தயாரித்துஉள்ளனர்.

திருப்பூர், 'நிப்ட் - டீ' கல்லுாரியின் ஆடை வடிவமைப்பு துறை மாணவ - மாணவியர், 90 பேர் இணைந்து, பின்னலாடை தொழில் நிலையை, பரமபத விளையாட்டு ஓவியமாக தீட்டி உள்ளனர்.இதன்படி, 100 கட்டங்களில், பஞ்சு, நுால், ஆடை ரகங்கள், தையல் மெஷின், கத்தரி, கேமரா, போன் என, திருப்பூரை குறிக்கும் வகையிலான பொருட்கள், ஓவியமாக இடம் பெற்று உள்ளன.

1,600 சதுர அடியில் உருவாகியுள்ள, இந்த பரமபதம் மீது, ஆறு ஏணி; ஐந்து பாம்புகள் வரையப் பட்டு உள்ளன.ஏணியில், தொழில்நுட்ப வளர்ச்சி, மறு சுழற்சி, கழிவுநீர் சுத்திகரிப்பு என, ஏற்றம் தரும் அம்சங்களும், பாம்பின் மீது, சாயக்கழிவு நீர் பாதிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை, வரி குழப்பங்கள் என, தொழில் வளர்ச்சியை பாதிக்கும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

'பாம்பின் வாயில் சிக்கினாலும், முயற்சி என்ற ஏணியை பிடித்து, திருப்பூர் தொழில் துறை, வெற்றியை கைப்பற்றும்' என்கின்றனர் மாணவர்கள். இதில் இடம்பெற்ற ஓவியங்களை, மாதிரியாகக் கொண்டு, ஏழு மாணவ - மாணவியர், ஏழு புதுமையான டிசைன்களுடன், பெண்களுக்கான ஆடை ரகங்களையும் தயாரித்துள்ளனர்.

கல்லுாரி தலைமை டிசைனர், பூபதிவிஜய் கூறுகையில், ''ஆயத்த ஆடை துறையினர், நம்பிக்கையோடு வளர்ச்சியை நோக்கி, பயணிக்க வேண்டும்; புதுவகை டிசைன்களை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, முக்கிய நோக்கம்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
deep - Chennai,இந்தியா
21-செப்-201920:04:18 IST Report Abuse
deep Pugazh... Do you think you are very intelligent? Parama padam is the place from where no one would like to return.. Reaching that top position is victory. What's your problem? Why do you bring Hinduism here? It's just a theme.. would you be happy it was called snake and ladders instead of Paramapadam?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-செப்-201912:09:18 IST Report Abuse
Pugazh V Yepdi sir, your opinion is very very correct. But, you may be tener as "anti-hindu", donde the game involved in "parama padham". According to this game, you climb up and up to reach a place from where there's no return. Is this the aim of entrepreneurs in Tirupur? A non s theme and idea. Stupidity of young india.
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
21-செப்-201905:16:39 IST Report Abuse
Yezdi K Damo Still Primary School Level thinking. No wonder,why China is 100 years ahead in all the field compare to India.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X