அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: பிரதமர் மோடி 7 நாட்கள் அரசு முறைப்பயணமாக, நேற்று (செப்.20) இரவு டில்லியிலிருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.latest tamil newsஅமெரிக்கா மற்றும் இந்தியா உடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி அமெரிக்கா பயணமானார். செப்.21 முதல் 27 வரை 7 நாட்களுக்கு அவர் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் தனது அமெரிக்க பயணத்தில் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். நியூயார்க்கில் நடைபெறும், 74வது ஐநா பொதுச் சபை கூட்டத்திலும் பங்கேற்கிறார். இது தவிர ஹவுஸ்டனில் நடக்கும் இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்ள உள்ளார்.


தலைவர்களுடன் சந்திப்பு


நியூயார்க்கில் நடக்க உள்ள ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் மோடி உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்திக்க உள்ளார். கூட்டத்தில், உலக அமைதி குறித்தும் பொருளாதார வளர்ச்சி, பயங்கரவாதத்தை தடுக்கும் வழிமுறைகள். உலக வெப்பமயமாதல் குறித்தும் மோடி பேச உள்ளார். இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுளள ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்தும், அக்.2ல் காந்தி பிறந்தநாள் வருவதையொட்டி காந்திய சிந்தனைகள் குறித்தும் மோடி ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேச உள்ளார்.


latest tamil news
டிரம்புடன் சந்திப்பு


டிரம்புடன் சந்திக்கும் மோடி இருதரப்பு உறவுகள் மேம்படுத்தும் விதமாக அவருடன் பேச உள்ளார். கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி ஏற்படுத்த ஏதுவாக டிரம்புடனான சந்திப்பு இருக்கும் என மோடி தெரிவித்தார்

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nethiadi - Chennai ,இந்தியா
21-செப்-201909:37:07 IST Report Abuse
Nethiadi நாடு நாடா சுத்துறது நால என்ன பயன்,மக்களின் வரிப்பணத்தில் வீண் விரயம், நாட்டுல 1008 பிரச்சனை இருக்கு அதெல்லாம் சரி பண்ண முடியல இப்போ வெளிநாட்டு பயணம் ரொம்ப முக்கியம், இது தான் கடைசி ஆட்சி BJP க்கு அதனால இருக்குற வரைக்கும் சுத்தமா அனுபவிச்சிட்டு போய்டலாம் னு கெளம்பியாச்சு.
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
21-செப்-201904:59:02 IST Report Abuse
Yezdi K Damo வெளிநாடு போகும்போது ஜாலியாகத்தான் இருக்கும். வண்ண மயமான ஆடை அலங்காரம் , இடத்திற்கு ஏற்ற தலைப்பாகை ,நடத்துங்க தலைவா.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21-செப்-201910:04:11 IST Report Abuse
 Muruga Velஇருபது மணி நேரம் விமானத்தில் பயணித்தால் தெரியும் … பகல் இரவு மாற்றங்களை சமாளிக்கும் ஆற்றல் வேண்டும் …. நீங்க எங்க பயணம் செஞ்சீங்க ….உதடுகளில் வீக்கம் அதிகமா தெரியுது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X