தமிழ்நாடு

ரூ.4 கோடி மதிப்புள்ள கண்மாய் நிலம் மீட்பு! ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
ரூ.4 கோடி மதிப்புள்ள கண்மாய் நிலம் மீட்பு! ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்

மதுரை : மதுரையில் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள கண்மாய் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீட்டனர். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரில் புதுக்குளம் கண்மாய் உள்ளது. 47.32 ஏக்கர் கொண்ட நீர்ப்பிடிப்பு பகுதியில் 19.7 சென்ட் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது.

அப்பகுதியில் ஆறு ஓட்டல் நிறுவனங்கள் கட்டடங்களை கட்டியிருந்தன. இதுகுறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுப்பணித்துறை பெரியாறு, வைகை நீர் வள ஆதார கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி தலைமையில் உதவி செயற்பொறியாளர் மொக்கைமாயன், உதவி பொறியாளர் செந்தில்குமார், பாசன ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இதன் மூலம் 19.7 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், 'மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு மீட்கப்பட்ட இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-செப்-201911:29:18 IST Report Abuse
Bhaskaran தற்போதைய ஆளும்கட்சி பிரமுகர்கள் மீண்டும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கு வசதியாக பழைய கடைகளை அகற்றியுள்ளார்கள் போலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X