மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 50:50 பங்கீடு இல்லையேல் தனித்துப்போட்டி என சிவசேனா மூத்த தலைவர்கள் சிலர் பா.ஜ.வை மிரட்டி வந்த நிலையில், பா.ஜ. வுடன் தான் கூட்டணி தொகுதி பங்கீடு பேசி தீர்க்கப்படும் என இன்று சிவசேனா தலைவர் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு, இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது; இன்னும் சில தினங்களில், தேர்தல்ஆணையம், தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது.

இம்மாநிலத்தில், காங்கிரஸ் --- தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணியும், தொகுதிப் பங்கீடும் உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், ஆளும் கூட்டணியான, பா.ஜ., - -சிவசேனா இடையே இழுபறி நிலவுகிறது. இந்நிலையில் இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியது, வரப்போகும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.வுடன் தான் கூட்டணி, தொகுதிபங்கீடு குறித்து ஒரிரு நாளில் பேசி சுமூக தீர்வு எட்டப்படும். 50:50 பங்கீடு என சிவசேனா வைத்த கோரிக்கை எல்லாம் ஊடகங்கள் கற்பனையாக பரப்பிவிட்டவை என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE