எடியூரப்பா அரசு எந்நேரமும் கவிழும்:குமாரசாமி ஆரூடம்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (16)
Advertisement
எடியூரப்பா அரசு எந்நேரமும் கவிழும்:குமாரசாமி ஆரூடம்

பெங்களூரு: கர்நாடகாவில் இடைத்தேர்தலுக்கு முன்பாக எடியூரப்பா அரசு எந்நேரமும் கவிழும் என முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி கூறினார்.
கர்நடகாவில் காங், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி பதவி விலகினார். அங்கு பா.ஜ. ஆட்சி அமைந்தது. முதல்வராக எடியூரப்பா உள்ளார்.

இந்நிலையில் சென்னாபட்டணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி அளித்த பேட்டி, கர்நாடகாவில் காலியாக உள்ள 17 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பதற்கு முன்பாக எடியூரப்பா ஆட்சி எந்நேரமும் கவிழும் என உறுதியாக நம்புகிறேன்.

நான் ஜோதிடன் அல்ல இருப்பினும் தற்போதைய அரசியல் சூழ்நிலையை பார்த்தால் எடியூரப்பா ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. 2020 ஜனவரி அல்லது பிப்ரவரியில் கர்நாடகா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் வரும். கட்சியை பலப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-செப்-201915:54:33 IST Report Abuse
Endrum Indian அது கவிழ்ந்தால் என்ன கவிழ வில்லையென்றால் என்ன??? உனக்கு பதவி கிடைக்காது எப்படியும்???போயி பகவத் கீதை படி இல்லே சுப்ரபாதம் கேள் போற வழிக்கு கொஞ்சமாவது புண்ணியம் தேடிக்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-செப்-201911:57:48 IST Report Abuse
Lion Drsekar .....பிறந்தவன் மனிதன் என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. இது ஒரு நாடு, இதில் மக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்காக அவர்கள் வரிப்பணத்தில் வாழ்கிறோம் என்று இல்லாமல் நாற்காலிக்காக தினம் தினம் இப்படி ஒரு செயல், தேவையில்லாத செயல்பாடுகள் என்று சென்றால் நாடு என்னாவது? இப்படி ஒரு அமைப்பு தேவையா? சுதந்திரம் பெற்றுத்தந்த புனித ஆன்மாக்கள் மக்களை இன்னலுக்கு ஆளாக்கினால் மன்னிக்கவே மன்னிக்காது . மக்களுக்காக வாழுங்கள், வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்
Rate this:
Share this comment
Cancel
21-செப்-201911:47:40 IST Report Abuse
நக்கல் ஒழுக்கம் கெட்ட தலைவர்களை ஆதரிக்கும் தொண்டர்கள் இருக்கும் வரை இவரை போன்றவர்கள் என்ன வேணா பேசுவாங்க... கர்நாடகாவில் நடக்கும் அரசியல் கேவலத்திலும் கேவலமான அரசியல்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X