பல்கலைகளில் ஜாதியபாகுபாடு: மத்திய அரசு பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

புதுடில்லி, :பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில், ஜாதி ரீதியான பாகுபாட்டால் நிகழும் தற்கொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என கோரி, இறந்த மாணவர்கள், ரோஹித் வெமூலா மற்றும் பாயல் தாட்வி ஆகியோரது குடும்பத்தினர், தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு ஏற்றது.இது தொடர்பாக பதிலளிக்க, மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.



latest tamil news




தற்கொலை


தெலுங்கானா மாநிலம்,ஐதராபாதில் உள்ள, மத்திய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமூலா, 2016ல் தற்கொலை செய்து கொண்டார்.அரசியல் அழுத்தம் காரணமாக, பல்கலையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.அதே போல, மஹாராஷ்டிரா மாநிலம்,மும்பையில் உள்ள, டோப்பிவாலா தேசிய மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் படித்து வந்த, பாயல் தாட்வி என்ற மாணவி, கடந்த மே மாதம் தற்கொலை செய்தார்.உடன் பணியாற்றிய மூன்று டாக்டர்கள், சமூக ரீதியாக அவமானப்படுத்தியதால், பாயல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


latest tamil news



பல்கலைகள் மற்றும் உயர் கல்வி நிலையங்களில், இது போன்ற ஜாதி ரீதியான அடக்குமுறைகள், பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என கோரி, இரண்டு மாணவர்களின் தாயும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.'நோட்டீஸ்'இந்த மனு, நீதிபதிகள், என்.வி.ரமணா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வ தாக கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-செப்-201915:35:52 IST Report Abuse
Lion Drsekar "இது போன்ற ஜாதி ரீதியான அடக்குமுறைகள், பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் " என்றால் ஜாதிகளுக்கு எதிராக பேசும் அமைப்புகளை முதலில் ஒழிக்கவேண்டும், ஜாதிகளின் பெயர்களில் இருக்கும் அரசியல் கட்சிகளின் பெயர்களை மற்றும் அவர்களின் கொள்கைகளை காளையவேண்டும். முளையிலேயே வித்திட்டு விட்டதால் தற்போது ஆலமரமாய் வளர்ந்து இன்று வளர்த்தவனுக்கே ஆப்பாக இருக்கிறது, நாம் சொல்லி யார் கேட்கப்போகிறார்கள், வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
21-செப்-201914:08:09 IST Report Abuse
தமிழ்வேள் உச்சநீதிமன்றம் ஏன் சாதி பெயர் பயன்பாட்டை எல்லா வழிகளிலும் தடை செய்யக்கூடாது ? நீதிபதிகள் முதலில் தங்கள் பெயரின் பின்னுள்ள சாதியை கைவிடலாமே ? ஏன் வர்மா ஷர்மா சுக்லா ஜா கோஷ் என்று அழைக்கப்பட வேண்டும் ? ஒரு மனிதனுக்கு பெயர் முன் எழுத்து தந்தை தாய் அல்லது இருவரின் பெயர் முதலெழுத்தாக மட்டுமே இருக்கவேண்டும்
Rate this:
Cancel
somxay - vientiane,லாஸ்
21-செப்-201913:07:39 IST Report Abuse
somxay ஜாதி ஜோதி போல சுடர்விட்டு வாழ கூடாது என்பதிற்க்காக சமுகத்தில் ஏற்ற தாழ்வு வரக்கூடாது என்பதிற்க்காக இட ஒதுக்கீடு நடக்கிறது. மற்றப்படி வேற எதற்க்கும் இல்லை இந்த இட ஒதுக்கீடு, ஆனால், நடப்பதோ முற்றிலும் ஜாதி பற்றியே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X