பொது செய்தி

இந்தியா

'ரசாயன தாக்குதலை எதிர்கொள்ள ராணுவத்துக்கு பயிற்சி தேவை': ராஜ்நாத்சிங்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

குவாலியர்: ''எதிர்காலத்தில், ரசாயன - உயிரியல் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான போதிய பயிற்சியையும், ஆயுதங்களையும், நம் ராணுவம் பெற்றிருக்க வேண்டும்,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.



latest tamil news



மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில், டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் நடந்த, 45ம் ஆண்டு விழாவில், ராஜ்நாத் சிங் பேசியதாவது:ரசாயன - உயிரியல் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டால், அது, மக்களின் வாழ்க்கை, சுகாதாரம், சொத்து மற்றும் வர்த்தகம் ஆகிய அனைத்தையும் பாதிக்கும். அவற்றையெல்லாம் மீட்க, பல ஆண்டுகள் ஆகும்.நம் படைகள் நிறுத்தப்படும் பல பிராந்தியங்களில், ரசாயன - உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தி, நமது எதிரிகள் தாக்குதல் நடத்த, அதிக வாய்ப்புகள் உள்ளன.இதை எதிர்கொள்ள, நம்மிடமும் அதற்கான ஆயுதங்கள் இருக்க வேண்டும். ரசாயன - உயிரியல் தாக்குதல்களை எதிர்கொள்வதில், நம் ராணுவத்துக்கு, போதிய பயிற்சியளிக்கப்படுவது அவசியம்.


latest tamil news



இந்த நிறுவனத்தின், ரசாயன - உயிரியல் அடிப்படையிலான பல தயாரிப்புகள், நம் ராணுவத்தில், பயன்படுத்தப்படுகின்றன.இவ்வாறு, ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-செப்-201911:54:42 IST Report Abuse
Pugazh V //ரசாயன - உயிரியல் அடிப்படையிலான பல தயாரிப்புகள், நம் ராணுவத்தில், பயன்படுத்தப்படுகின்றன.// இதையும் இவர் தான் சொல்கிறார். // ரசாயன தாக்குதலை எதிர்கொள்ள பயிற்சி தேவை// இதையும் இவர் தான் சொல்கிறார். ?? பயிற்சி இல்லாமல் என்னத்துக்கு அவற்றை தயாரிக்கிறார்கள்?? பாஜகவின் எந்த அமைச்சருக்கு மே ஆட்சி த்திறன் நிர்வாக அறிவு இல்லை .
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
21-செப்-201914:55:38 IST Report Abuse
N.K உங்களை பொறுத்தவரை திறமை என்பது "ஊழல் செய்வது" . இங்கே திமுக, இந்திய அளவில் காங்கிரஸ் மிக மிக திறமை சாலிகள் ....
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
21-செப்-201905:03:41 IST Report Abuse
Yezdi K Damo ராஜ்நாத் ஜி அதனால ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லை. இஸ்ரேல் நாட்டோட சும்மா ஒரு மூவாயிரம் கோடி ரூபாயில் பயிற்சி முகாம் ஏற்படுத்திட்டா எல்லாம் சரியாகிவிடும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X