அயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement

புதுடில்லி, அயோத்தி வழக்கை, தினமும் ஒரு மணி நேரம் கூடுதலாக விசாரிக்க, உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.



latest tamil news



உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள, ராம ஜென்ம பூமி -- பாபர் மசூதி நில விவகார வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு, ஆகஸ்ட் முதல், நாள்தோறும் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையில், அக்டோபர், 18ம் தேதிக்குள் வாதங்களை முடித்துக்கொள்ள, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமை யிலான அமர்வு முன், 28-வது நாளாக, இந்த வழக்கு விசாரணை, நேற்று நடந்தது.


latest tamil news



அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில், ''அயோத்தி வழக்கை, தினமும், ஒரு மணி நேரம் கூடுதலாக விசாரிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, உச்ச நீதிமன்றத்தின் பணி நேரம், மாலை, 4:00 மணிக்கு பதில், 5:00 மணிக்கு முடியும்,'' என்றார்,அயோத்தி வழக்கில், நவம்பர் மாத நடுவில், தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
21-செப்-201916:04:29 IST Report Abuse
pradeesh parthasarathy கண்டிப்பா கட்டணும் ...அது தானே தேர்தல் வாக்குறுதி ...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-செப்-201915:51:25 IST Report Abuse
Endrum Indian இதெல்லாம் ஒரு அதிரடி???சொல்ல துளிக்கூட வெட்கமாயில்லை இந்த கோர்ட்டுக்கு எப்போ பார்த்தாலும் ஒத்தி வைப்பு, ஜாமீன்???அம்மா நான் தெரியாமத்தான் கேட்கின்றேன் உங்கள் அம்மா உங்களை 10 மாதத்தில் பெற்றார்களா இல்லை 10 வருடத்தில் பெற்றார்களா???எந்த ஒரு வழக்கும் அரசியல்வாதி இருந்தால் 20 வருடம் குறைந்தது இழுத்தடிக்கும். இந்த அயோத்தி வழக்கு எவ்வளவு நாளாக இல்லை மாதங்களாக இல்லை வருடங்களாக நடக்கின்றது??என்ன விஷயம்???ராமர் கோவில் இருந்ததா இல்லையா??அதன் ஆதார பூர்வமாக Foundation ராமர் கோவில் உடைத்து ஒரு மசூதி போல ஏதோ கட்டினார்கள் என்று அகழ்வாராய்ச்சியில் தான் தெளிவாக இருந்ததே???இன்னும் என்ன தாமதம் , ஒரு மணிநேரம் தினம் அதிகம் வேலை பார்ப்பார்களாம்????
Rate this:
Cancel
Sundar - Hartford,யூ.எஸ்.ஏ
21-செப்-201915:33:44 IST Report Abuse
Sundar இங்கே கருது சொல்லும் சவுதி அரேபிய அன்பர்களும், துபாய் அன்பர்களும் உண்மையிலேயே வாங்குகிற காசுக்கு (சாரி, டினாருக்கும், டிரஹாமுக்கும்) நல்லாத்தான் கூவுறாங்க. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் கச்சா ஆயிலுக்கு டிமாண்ட் இல்லை என்று ஆனதும், தன்னால அமைதி ஆகி விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X