காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி: காலநிலை மாற்றத்தின் மீது உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, ஸ்வீடன் மாணவி கிரேட்டா என்பவர் முன்னெடுத்த போராட்டத்தில், நேற்று(செப்.,20, வெள்ளி) இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போராடினர்.'விடி'வெள்ளி:


ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க்(16), உலக வெப்பமயமாதலால் தனது எதிர்காலம் அபாயத்துக்குள்ளாவதை எண்ணி, வெள்ளிக்கிழமை தோறும், பள்ளியை புறக்கணித்து, ஸ்வீடன் பார்லி., முன்பு, பதாகையை தாங்கி, தனி ஆளாக போராட துவங்கினார். அடுத்த சில வாரங்களில், பல பள்ளி மாணவர்களும் அவருடன் போராட்டத்தில் இணைந்தனர். பின், தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய இவர், முழுநேரமாக களத்தில் இறங்கினார். இவரது செயல்பாடு கவனம் பெற, சமூக வலைதளங்களில் பரவியது. ஸ்வீடன் தாண்டி பல வெளிநாடுகளிலும் கிரேட்டா பிரபலமாக துவங்கினார்.Advertisement


நோபலுக்கு பரிந்துரை:


பல நாடுகளை சேர்ந்த மாணவர்களும் ஒருங்கிணைய, கடந்த மார்ச் 15ல், 60 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளிகளை புறக்கணித்து, FFF (Friday for Future) என பிரசாரம் மேற்கொண்டது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தனர். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு, கிரேட்டாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர் நோபல் பரிசு பெற்றால், குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற மலாலாவின்(17) சாதனையை முறியடிப்பார். கடந்த ஆண்டு 'டைம்' இதழ் வெளியிட்ட, செல்வாக்குமிக்க இளைஞர் பட்டியலில் கிரேட்டா இடம் பிடித்தார்.இந்நிலையில், செப் 20 முதல் 27 வரை, உலகம் முழுவதிலுள் உள்ள மாணவர்கள் எதிர்காலத்துக்காக போராட வேண்டும் என கிரேட்டா அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென்கொரியா, சிலி, ஹங்கேரி உள்ளிட்ட 150க்கும் மேலான நாடுகளை சேர்ந்த மாணவர்கள், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவிலும்..


மாணவர்கள் மட்டுமன்றி பணியில் இருப்பவர்களும், பணியை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கினர். இந்தியாவில் டில்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-201916:29:08 IST Report Abuse
இனியவன் ரஜினி வாய்ஸ் : இப்படியே எதுக்கெடுத்தாலும் போராட்டம்னா இந்த உலகம் சுடுகாடாகி விடும்.
Rate this:
Share this comment
Cancel
tshajahan - Vellore,இந்தியா
21-செப்-201908:44:17 IST Report Abuse
tshajahan All the best to an awareness to the students. I hope that, you are 100% eligible to get a Nobel prize.
Rate this:
Share this comment
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
21-செப்-201907:39:03 IST Report Abuse
sekar ng சென்னையில் தேவையற்ற போராட்டத்திற்கு தான் ஆதரவு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X