பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (44)
Advertisement

புதுடில்லி: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹீல்ரமானியின் ராஜினாமாவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றார்.


சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி, தஹில் ரமானி மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவரது ராஜினாமாவை ஏற்றார். செப்.,6ல் தஹீல்ரமானி ரமானி ராஜினாமா கடிதம் அனுப்பியிருந்ததாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது

சென்னை ஐகோர்ட் 15 நாட்களாக தலைமை நீதிபதி இல்லாமல் செயல்பட்டதை தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரியை ஜனாதிபதி ராம்நாத் நியமிக்க ஒப்புதல் அளித்தார். தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக குறைந்து காலியிடங்கள் 18 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ஐகோர்ட் பொறுப்பு நீதிபதியாக வினீத்கோத்தாரி நாளை மறுநாள்(செப்.,23) பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜய்குமார் மிட்டலை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கொலிஜியம் சிபாரிசு செய்திருந்தாலும் ஜனாதிபதி ராம்நாத் அதற்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அஜய்குமார் மிட்டல் மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna -  ( Posted via: Dinamalar Android App )
21-செப்-201922:27:39 IST Report Abuse
krishna Rajasekaran ena vakkil TV pechula varuvane.Andha koomutta indha ammavukku romba found koduthabodhe thorium indha amma oru useless ena.rajinama seidhu ponadhu nattukku nalladhu.indha Kenyan Rajasekaran pais kaidhu seidhapoo enna koovu koovinan
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
21-செப்-201922:24:18 IST Report Abuse
oce கொலிஜியம் என்ற நீதிபதிகள் அடங்கிய அமைப்பில் உள்ளவர்கள் அவர்களுக்கு இணையான இன்னொரு நீதிபதியை மாற்றலாமா.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-செப்-201921:39:56 IST Report Abuse
Nallavan Nallavan நீதித்துறையின் களங்கம் நீங்கட்டும் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X