சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் கோளாறு: 240 பயணிகள் தப்பினர்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (10)
Advertisement

சென்னை: சென்னையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் லேசான கோளாறு ஏற்பட்டது. உடனடியாக விமானம் இறக்கப்பட்டதால் 240 பயணிகள் உயிர் தப்பினர்.


சென்னையில் இருந்து இன்று காலை தோகாவுக்கு இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டது. வானில் சிறிது தொலைவு சென்றதும் லேசான புகை வந்தது.

இதனையடுத்து, உஷாரான விமானி உடனடியாக சாதுர்யமாக தரை இறக்கினார். தொடர்ந்து பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். மின்கசிவு காரணமாக இந்த புகை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் விமான நிலையத்தில் அனைத்து மீட்பு படையினரும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
21-செப்-201919:03:51 IST Report Abuse
spr "இந்த சாபக்கேடு பிரைவேட் மட்டுமில்லை அரசு நடத்தும் ஏர் இந்தியாவிலும் உண்டு. சென்ற வாரம் ஜனாதிபதி பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு. இப்போது பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்கா பயணித்துக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா விமானமும் கோளாறு காரணமாக Frankfart விமானநிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டு, கோளாறு சரிசெய்ததும் பின்னர் சுமார் 3 மணிநேரம் தாமதமாக சென்றுகொண்டிருக்கின்றார். அதுமட்டுமின்றி ,சென்றவருடம் செல்வி .ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பயணித்த விமானத்திலும் கோளாறு ஏற்பட்டு , பாதிவழி வந்தபின்னர் மீண்டும் டெல்லிக்கு திரும்பச்சென்று, வேறு மாற்று விமானம் ஒன்றுமில்லாததால் மிலிட்டரி விமானத்தை ஏற்பாடு செய்து இறுதிச்சடங்கில் தாமதமாக பங்கேற்க நேர்ந்தது" அமேரிக்கா போனவுடன் போயிங் நிறுவனத்துடன் ஒரு "டீல்" போட இது நல்ல வாய்ப்பு தருமோ அதனால் ட்ரம்ப் நம்ம பக்கம் வந்துடலாமோ
Rate this:
Share this comment
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-செப்-201914:10:21 IST Report Abuse
Ramki இந்த சாபக்கேடு பிரைவேட் மட்டுமில்லை அரசு நடத்தும் ஏர் இந்தியாவிலும் உண்டு. சென்ற வாரம் ஜனாதிபதி பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு. இப்போது பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்கா பயணித்துக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா விமானமும் கோளாறு காரணமாக Frankfart விமானநிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டு, கோளாறு சரிசெய்ததும் பின்னர் சுமார் 3 மணிநேரம் தாமதமாக சென்றுகொண்டிருக்கின்றார். அதுமட்டுமின்றி ,சென்றவருடம் செல்வி .ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பயணித்த விமானத்திலும் கோளாறு ஏற்பட்டு , பாதிவழி வந்தபின்னர் மீண்டும் டெல்லிக்கு திரும்பச்சென்று, வேறு மாற்று விமானம் ஒன்றுமில்லாததால் மிலிட்டரி விமானத்தை ஏற்பாடு செய்து இறுதிச்சடங்கில் தாமதமாக பங்கேற்க நேர்ந்தது. Aircraft Maintenance துறையில் பணியாற்றும் அத்தனை கள்ளக்கழுவேணிகளையும் ஒட்டுமொத்தமாக தூக்கிவிட்டு , துடிப்பான இளைஞர்களை நியமிக்க வேண்டிய நிர்பந்தம் நேரிட்டுள்ளது.உடனடி நடவடிக்கை இல்லை என்றால் நாளை பெரும் உயிர்ச்சேதம் நேர்ந்து மாபெரும் விலை கொடுக்க நேரிடும்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-செப்-201911:57:07 IST Report Abuse
மலரின் மகள்கள் சில சந்தேகங்கள் வருவது தவிர்க்கமுடியாதததாக தெரிகிறது. ஆம்னி பேருந்துகள் செய்வதை போல அவர்கள் வசதிக்காக சிலவற்றை நிர்வாகத்தினர் செய்கிறார்களா? விமானி பற்றாக்குறையா? விமான பற்றாக்குறையா? பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு இந்த நிறுவனம் என்ன செய்தது. வெளிநாட்டு பயணம் என்றால் ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும் முழு உணவும் அளித்து. மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை. செலுத்திய பணத்தை முழுவதுமாக திருப்பி தரவேண்டும் கூடவே அவர்களுக்கு இலவசமாக வேறு விமானத்திலோ அல்லது அடுத்த ஓரிரண்டு நாட்களுக்குள்ளாக இலவசமாக அழைத்து சென்று சேருமிடத்தில் பத்திரமாக சேர்க்கவேண்டும். அனைத்தும் இவர்களின் பொறுப்பே. இதில் எதையும் செய்யமாட்டார்கள். ஜெட் ஏர்வய்ஸ், கிங் பிஷர் நிறுவனங்களை வளரவிடாமல் தடுத்ததின் விளைவுகள். எந்த அரசியல் வாதி சூனியம் வைத்தாரோ திரைமறைவில். அவருக்கும் இறைவனுக்கும் வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X