பொது செய்தி

தமிழ்நாடு

சாதனையாளர்களுக்கு விருது

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019
Advertisement
Krishna River,கிருஷ்ணா நதி,சாதனையாளர்கள், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்,  விருது

சென்னை: ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர், என்.கே.மஹாதேவ அய்யர் பிறந்த நாளை முன்னிட்டு, அந்நிறுவனம், பல்வேறு துறைகளின் சாதனையாளர்களுக்கு, விருது வழங்கி கவுரவித்தது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தை, மறைந்த, என்.கே.மஹாதேவ அய்யர் துவக்கினார். அவரின் பிறந்த நாளை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஆண்டு தோறும், நிறுவனர் தினமாக கொண்டாடி வருகிறது.
அதன்படி, 94வது நிறுவனர் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், பல துறைகளில் சாதித்த நபர்களை கவுரவிக்கும், 'சல்யூட் டூ லெஜெண்ட்' என்ற நிகழ்ச்சி, சென்னை, மயிலாப்பூரில், நேற்று, நடந்தது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையார், முரளி தலைமை வகித்தார்.விழாவில், 'ஏ.வி.எம்., ஸ்டுடியோஸ்' எம்.சரவணன், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள், பெரிய கருப்பையா, எஸ்.ராஜேஸ்வரன், பி.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக பங்கேற்றனர்.
அவர்கள், 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர், ஆர்.லட்சுமிபதி, ஜவுளி வர்த்தகர், நல்லி குப்புசாமி, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், டி.வி.ராமானுஜம், ஜி.ஆர்.டி., குழும தலைவர், ஜி.ராஜேந்திரன், பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு, விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.

பாரம்பரிய நடன கலைஞர், பத்மா சுப்ரமணியம், எழுத்தாளர், சிவசங்கரி, ஆன்மிக பேச்சாளர், ஆராவமுதாச்சாரியார், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, துரைசாமி ராஜூ, நாடக நடிகர், காத்தாடி ராமமூர்த்தி, கோவை, கே.பி.ஆர்., குழும தலைவர், கே.பி.ராமசாமி, பொன் பியூர் கெமிக்கல் நிறுவன தலைவர், பொன்னுசாமி, மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, இதய அறுவை சிகிச்சை நிபுணர், எஸ்.தணிகாசலம் உள்ளிட்ட, 21 பேர் கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X