பொது செய்தி

தமிழ்நாடு

நவம்பர் முதல் காலவரையற்ற ஸ்டிரைக் : வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (50)
Advertisement

சென்னை : நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தப்படும் என வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


வங்கிகள் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து செப்.,26 மற்றும் 27 ஆகிய 2 நாட்களும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளிட்டோர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். 26, 27 ஆகிய 2 நாட்கள் ஸ்டிரைக், அதைத் தொடர்ந்து 28,29 ஆகிய தேதிகள் வார இறுதி நாட்கள் என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த வேலை நிறுத்த போராட்டம் காலவரையற்ற போராட்டமாக தொடர உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவிக்கையில், செப்.,26,27 ஆகிய நாட்களில் நடக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் தீர்வு கிடைக்காவிட்டால் நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என எச்சரித்துள்ளனர். வங்கி ஊழியர்கள் நடத்தும் இந்த 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றிற்கு ரூ.48 கோடி அளவிற்கு பண பரிவர்த்தனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-201901:26:38 IST Report Abuse
Ganesan Madurai தாமதிக்காமல் மக்களை மிரட்டும் அரசை மிரட்டும் சட்டத்தை மதிக்காத இந்த அயோக்கிய இடதுசாரி வங்கி ஊழியர்களை கைது செய்து விட்டு வேலையில்லாத தகுதியான இளைஞர்களுக்கு வங்கி வேலையை உடனே கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
R chandar - chennai,இந்தியா
21-செப்-201922:52:27 IST Report Abuse
R chandar Bank staff should think of their benefits and benefits after their retirement they are getting ,they should realize that most of the peoples in india are wroking in private sector and working hard for their earning with job threat from management and there is no security for their job , where as benefits are been given by government to bank staff and government staff for their full life term for them as well as for their family , this security of job is being enjoyed only by govenment and bank staff , they should realize this and support government for merging of banks only for betterment of benefits to bank run profitably. Here government has given full assurance for their safety and continuous of services with out interruption in service. This is the time government should speed up the mechanization of clearing and make clearing of cheque happened on all days of 24/7 and make the customer happy with the performance of merger of banks and see to it benefits of declaring bonus for bank employees should also be benefited to depositors also based on their deposit amount on every year of declaring as customers are also generating funds for working capital of the banks. Since all clearing of cheques and most of the operations are mechanized government should five day a week for bank operation to reduce the running cost of the banks and reduce the number of holidays of the year.
Rate this:
Share this comment
Cancel
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
21-செப்-201921:32:02 IST Report Abuse
orange mittai இணைக்கப்பட்ட வங்கிகளில் ஒருத்தனும் ஒழுங்கா வேலை செய்வது கிடையாது...பந்தா பண்ணுவது, எரிந்து விழுவது...சரியான நடவடிக்கை எடுங்க....முடிஞ்சா நல்லா பிண்ணுங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X