பொது செய்தி

இந்தியா

லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: சிவன்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement

புதுடில்லி : நிலவின் மேற்பரப்பில் உள்ள லேண்டர் விக்ரமுடனான தொடர்பை பெற முடியவில்லை என இஸ்ரோ சிவன் அறிவித்துள்ளார்.latest tamil news


நிலவை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ சார்பில் சந்திரயான் 2 விண்கலம் அனுப்பப்பட்டது. இதில் இருந்து பிரிந்து சென்று 14 நாட்கள் நிலவில் ஆய்வு செய்ய இருந்த லேண்டர் விக்ரம், நிலவில் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் தொலைவில் பூமியுடனான தொடர்பை இழந்தது. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் முயற்சி செய்தும் பலனிக்கவில்லை. இந்நிலையில் லேண்டரின் ஆயுட்காலம் வெள்ளியன்று முடிவடைந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் லேண்டர் விக்ரமுடனான தொடர்பை பெற முடியவில்லை.


நிலவின் தென் முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சார்பில் சந்திரயான் 2 விண்கலம் அனுப்பப்பட்டது. இதில் இருந்து பிரிந்து சென்று 14 நாட்கள் நிலவில் ஆய்வு செய்ய இருந்த லேண்டர் விக்ரம், நிலவில் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் தொலைவில் பூமியுடனான தொடர்பை இழந்தது. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளும், அமெரிக்காவின் நாசாவும் தொடர்ந்து முயன்று வந்தன. ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

இந்நிலையில் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நேற்று (செப்.,20) உடன் முடிவடைந்தது. லேண்டரை தொடர்பு கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவும் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் நிலவில் இரவு பொழுது துவங்கியதால் மிக கடுமையான உறை குளிரால், லேண்டரும் அதனுடன் அனுப்பப்பட்ட ரோவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


latest tamil newsஇந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், லேண்டர் விக்ரமுடனான தொடர்பை பெற முடியவில்லை. லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டது. அதனால் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் சந்திரயான் 2 உடன் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆர்பிட்டரில் 8 கருவிகள் உள்ளன. இவை அனைத்தும் சிறப்பாக இயங்கி வருகின்றன. ஆர்பிட்டர் ஓராண்டிற்கு பதிலாக அடுத்த 7 ஆண்டுகள் ஆய்வை தொடரும். சந்திரயான் 2 திட்டம் 98 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
22-செப்-201900:50:50 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் மோடியின் சாதனை
Rate this:
Cancel
K.Ramesh - goa,இந்தியா
21-செப்-201921:56:04 IST Report Abuse
K.Ramesh Ithu tharkaligamana thadangal. Tholvi alla. Muyarchi seyungal sir. Nilavil indian sellapovathu uruthi. God bless your team for success of isro
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
21-செப்-201919:44:50 IST Report Abuse
 nicolethomson முயற்சியை கைவிடாதீங்க சார் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X