பொது செய்தி

தமிழ்நாடு

ஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை: வீடியோ வைரல்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (260)
Share
Advertisement

சென்னை: கிறிஸ்துவ ஜெபக்கூட்டங்களில் ஆவி வந்து ஆடுவதற்கு சிலருக்கு பயிற்சி தந்து ஒத்திகை பார்க்கும் வீடியோ வைரலாக பரவுகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனாலும், ஜெபக்கூட்டத்தில் ஆவிகள் விரட்டப்படுவதாக கூறப்படுவதே ஒரு ‛நாடகம்' என்பது தெளிவாகி உள்ளது.latest tamil newsகிறிஸ்துவ ஜெபக்கூட்டங்களில் ஆவி வந்து ஆடுவதற்கு சிலருக்கு பயிற்சி தந்து ஒத்திகை பார்க்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

சில கிறிஸ்துவ கூட்டங்களில் ஜெபம் செய்தால் உடலில் இருக்கும் ஆவி வெளியே வரும் என்று சொல்லி வெளிநாட்டில் இருந்து வந்தும், உள்நாட்டை சேர்ந்த சில கிறிஸ்துவ போதகர்கள், ஆவியை விரட்டும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

போதகர்கள், உச்சஸ்தாயிலில், ‛ஆலிலோயா' என்று சத்தம் போட்டதும், கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள், குறிப்பாக பெண்கள் உடனே உடலை குலுக்கியும் தலையை உலுப்பியும் ஆட்டம் போட்டபடி கீழே விழுந்து உருள்வார்கள்.


latest tamil newsசிறிது நேரம் கழிந்ததும், ஒன்றும் நடக்காதது போல் எழுந்திருப்பர். ‛‛உடலில் ஏதோ இருந்தது. என்ன நடந்தது என்று தெரியவில்லை. இப்போது அது போய்விட்டது. இப்போது நன்றாக இருக்கிறது'' என்று ‛கதை' விடுவர்.அதற்கு அந்த போதகர், ‛உன் மேல் இருந்த ஆவி, நான் பிரார்த்தனை செய்ததால் போய்விட்டது. கர்த்தர் உங்களை காப்பாற்றிவிட்டார்'' என்று ‛கப்சா' விடுவார். உடனே அங்கிருப்பவர்கள், ‛உணர்ச்சி பெருக்குடன் ' ஜெபிப்பார்கள்.


latest tamil newsஇதை மற்ற மதத்தினர் எதிர்த்து வந்தனர். ‛‛ஏழை மக்களை, அவர்களின் அறியாமையையும் வறுமையையும் பயன்படுத்தி இப்படி செய்யாதீர்கள். அவர்களை மதம் மாற்றாதீர்கள்'' என்று கண்டிக்கின்றனர்.

இப்போது இந்த வீடியோவை யாரோ ஒருவர் சமூகவலை தளங்களில் பரப்பி விட்டுள்ளார். இதை நமது வாசகர் ஒருவர் அனுப்பி உள்ளார். வீடியோவில், ஜெபக்கூட்டத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று திருச்சியில் ஒத்திகை பார்த்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இது உண்மையான வீடியோவா என்று விசாரிக்க முடியவில்லை. போலீஸ் மூலம் விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsசில கிறிஸ்துவர்கள் இது பற்றி கூறும்போது, ‛‛கிறிஸ்துவ மதத்தில் இப்படியெல்லாம் மதத்தை பரப்ப வேண்டும் என எங்கும் கூறப்படவில்லை. மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மதம் என்று கூறிக்கொண்டு, ஆவி,பிசாசு என்று சிலர் பேசுவது எங்கள் மதத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது. ஏழ்மையில் உள்ளவர்களுக்கு பணம் தருவதாகவும் வேலை வாங்கித் தருவதாகவும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து சில போதகர்கள் இப்படி செய்கின்றனர். இதன் மூலம் அந்த போதகர்கள் தான் சம்பாதிக்கின்றனர். இது அந்த அப்பாவி மக்களுக்கு தெரிய மாட்டேன் என்கிறது.

‛‛நள்ளிரவு எழுப்புதல் கூட்டம்'', ‛‛ஆவியை விரட்டும் கூட்டம்'' ‛‛நற்செய்தி கூட்டம்'' போன்ற பெயர்களில் நடக்கும் இந்த பித்தலாட்டங்களால் மற்ற மதத்தினர் எங்களை கிண்டலாக பார்க்கின்றனர். நன்றாக நடித்தால் அதிக பணமும் மீண்டும் வாய்ப்பும் தரப்படுகிறது. இதற்காகவே சிலர் ‛ஓவர் ஆக்டிங்' செய்கின்றனர். இதற்கு அரசு முடிவு கட்ட வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (260)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
26-செப்-201912:55:52 IST Report Abuse
TamilArasan இதில் என்ன கொடுமை என்னவென்றால் இது போன்று போலி பித்தலாட்டக்காரர்களை பெரும்பாலான கிருத்துவ மக்கள் நம்புவதுதான்.... இந்த பிராடு குறுப்பிற்கு எல்லாம் முன்னோடி தினகரன் - சாதாரண வங்கி கிளர்க்காய் இருந்த தினகரன் VRS வாங்கி விட்டு கைகளில் பைபிளை தூக்கி குருடரை பார்க்க வைக்கிறேன், ஊமையை பேச வைக்கிறேன், முடமானவனை நடக்க வைக்கிறேன் என்று சோசியல் மீடியா இல்லாத காலத்தில் மக்களை ஏமாற்றி இன்று பல லட்ச கோடி சொத்து சேர்த்து சென்றுள்ள மகா பெரிய திருடன்... சமீபத்தில் இந்து கோவிலைகளை சாத்தானின் கூடாரம் என்று கூறும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உட்பட்ட மோகன் C லாசராஸ் போன்ற கபடதாரிகளின் பின் செல்லும் லட்சக்கணக்கான கிறித்துவ மக்கள் இப்படி 90 % கிருத்துவ பெருமக்கள் மூடர்களாக, குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதால்தான் போலி பாதிரிகள் கோலோச்ச முடிகிறது...
Rate this:
Cancel
Ameen - Edho oru ooru,ஜெர்மனி
26-செப்-201911:48:21 IST Report Abuse
Ameen அட பாவிங்கள இப்போ தான் இதையே கண்டுபிடிக்கிறிங்களா , இவனுகளே பாத்தா தெரியல , இவ்வனுங்க டுபாகூருன்னு
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
26-செப்-201909:23:40 IST Report Abuse
natarajan s இதுமாதிரி நிகழ்ச்சிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அவர்களது community இல் lower rung இல் இருப்பவர்கள்தான், இந்த பில்லி சூனியம் பிசாசு ஆவி எல்லாம் இல்லாதவர்களுத்தான், அவர்களுக்கு கடன் தொல்லை நிம்மதியின்மை எதனால் வரும்? இல்லாமையால்தான். அதைத்தான் இவர்கள் பயன்படுத்தி அவர்களிடமும் தசபாகம் வாங்கி இவர்கள் செழிப்படைகிறார்கள். அவர்கள் அப்படியே இருகிறார்கள். இதில் ஒவொரு மாதமும் இவ்வளவுபேரை கிறித்துவத்திற்கு கொண்டுவந்தேன் என்று கணக்கு காட்டி வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறார்கள். சமீபகாலமாக இது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. எவ்வளவு TV நிகழ்ச்சிகள்? இதை நடத்த எங்கிருந்து பணம் வருகிறது? இந்த பணத்தை வைத்து அந்த ஏழ்மை பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு செலவழிக்கலாம் ஆனால் இதை நடத்துபவர் நல்ல முறையில் முன்னேறி தேவனின் மறுஅவதாரம் என்று குடும்பம் முழுமையும் ஆசீர்வாதம் பெற்று (அட்) ஊழியம் செய்வதுதான் கொடுமை. தேவனும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரை மட்டும் ஆசிர்வதித்து உண்மையில் ஊழியம் செய்வோரை ஆசிர்வதிக்காமல் இவர்களை நாடி செல்ல வைத்துவிடுகிறார். வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் ஓடிப்போனவர் இப்பொது ஒரு TV Channel நடத்தும் அளவிற்கு ஊழியத்தில் பலன் பெற்றுள்ளார் அவரை பார்ட்டிகு பலர் இந்த தொழிலுக்கு வருகிறார்கள். இதுவும் ஒரு தோளில் என்று ஆகிவிட்டது .இவர்களுக்கெல்லாம் வழிகாட்டி, குரு, mentor அந்த இயேசு அழைக்கிறார் குடும்பம்தான். நிறைய பேர் அவரிடம் இருந்துதான் inspiration பெற்று இந்த தொழிலை திறம்பட நடத்துகிறார்கள். பாவம் இந்த மக்கள் நம்பி கெடுகிறார்கள். இதுமாதிரியான கூட்டத்திற்கு அவர்கள் சமூகத்தின் படித்தவர்களும், பணக்காரர்களும், வசதியாக உள்ளவர்களும் வருவது மிக குறைவு , ஏனென்றால் அவர்களுக்கு உண்மை தெரியம். அதிலும் சாட்சி கூறுவது என்று ஒன்றை வைத்து இவர்கள் நடத்தும் நாடகத்திற்கு எல்லையே கிடையாது . இவளவு நம்பிக்கை உள்ளவர்கள் பின் ஏன் மருத்துவம் படிக்க போட்டி போட வேண்டும் எல்லாம் தேவனால் முடியும் என்றால் மருத்துவத்துக்கு என்ன வேலை ? ஏமாளிகள் இருக்கும் வரை இப்படி ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X