ஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை: வீடியோ வைரல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை: வீடியோ வைரல்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (260)
Share

சென்னை: கிறிஸ்துவ ஜெபக்கூட்டங்களில் ஆவி வந்து ஆடுவதற்கு சிலருக்கு பயிற்சி தந்து ஒத்திகை பார்க்கும் வீடியோ வைரலாக பரவுகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனாலும், ஜெபக்கூட்டத்தில் ஆவிகள் விரட்டப்படுவதாக கூறப்படுவதே ஒரு ‛நாடகம்' என்பது தெளிவாகி உள்ளது.latest tamil newsசில கிறிஸ்துவ கூட்டங்களில் ஜெபம் செய்தால் உடலில் இருக்கும் ஆவி வெளியே வரும் என்று சொல்லி வெளிநாட்டில் இருந்து வந்தும், உள்நாட்டை சேர்ந்த சில கிறிஸ்துவ போதகர்கள், ஆவியை விரட்டும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

போதகர்கள், உச்சஸ்தாயிலில், ‛ஆலிலோயா' என்று சத்தம் போட்டதும், கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள், குறிப்பாக பெண்கள் உடனே உடலை குலுக்கியும் தலையை உலுப்பியும் ஆட்டம் போட்டபடி கீழே விழுந்து உருள்வார்கள்.


latest tamil newsசிறிது நேரம் கழிந்ததும், ஒன்றும் நடக்காதது போல் எழுந்திருப்பர். ‛‛உடலில் ஏதோ இருந்தது. என்ன நடந்தது என்று தெரியவில்லை. இப்போது அது போய்விட்டது. இப்போது நன்றாக இருக்கிறது'' என்று ‛கதை' விடுவர்.அதற்கு அந்த போதகர், ‛உன் மேல் இருந்த ஆவி, நான் பிரார்த்தனை செய்ததால் போய்விட்டது. கர்த்தர் உங்களை காப்பாற்றிவிட்டார்'' என்று ‛கப்சா' விடுவார். உடனே அங்கிருப்பவர்கள், ‛உணர்ச்சி பெருக்குடன் ' ஜெபிப்பார்கள்.


latest tamil newsஇதை மற்ற மதத்தினர் எதிர்த்து வந்தனர். ‛‛ஏழை மக்களை, அவர்களின் அறியாமையையும் வறுமையையும் பயன்படுத்தி இப்படி செய்யாதீர்கள். அவர்களை மதம் மாற்றாதீர்கள்'' என்று கண்டிக்கின்றனர்.

இப்போது இந்த வீடியோவை யாரோ ஒருவர் சமூகவலை தளங்களில் பரப்பி விட்டுள்ளார். இதை நமது வாசகர் ஒருவர் அனுப்பி உள்ளார். வீடியோவில், ஜெபக்கூட்டத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று திருச்சியில் ஒத்திகை பார்த்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இது உண்மையான வீடியோவா என்று விசாரிக்க முடியவில்லை. போலீஸ் மூலம் விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsசில கிறிஸ்துவர்கள் இது பற்றி கூறும்போது, ‛‛கிறிஸ்துவ மதத்தில் இப்படியெல்லாம் மதத்தை பரப்ப வேண்டும் என எங்கும் கூறப்படவில்லை. மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மதம் என்று கூறிக்கொண்டு, ஆவி,பிசாசு என்று சிலர் பேசுவது எங்கள் மதத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது. ஏழ்மையில் உள்ளவர்களுக்கு பணம் தருவதாகவும் வேலை வாங்கித் தருவதாகவும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து சில போதகர்கள் இப்படி செய்கின்றனர். இதன் மூலம் அந்த போதகர்கள் தான் சம்பாதிக்கின்றனர். இது அந்த அப்பாவி மக்களுக்கு தெரிய மாட்டேன் என்கிறது.

‛‛நள்ளிரவு எழுப்புதல் கூட்டம்'', ‛‛ஆவியை விரட்டும் கூட்டம்'' ‛‛நற்செய்தி கூட்டம்'' போன்ற பெயர்களில் நடக்கும் இந்த பித்தலாட்டங்களால் மற்ற மதத்தினர் எங்களை கிண்டலாக பார்க்கின்றனர். நன்றாக நடித்தால் அதிக பணமும் மீண்டும் வாய்ப்பும் தரப்படுகிறது. இதற்காகவே சிலர் ‛ஓவர் ஆக்டிங்' செய்கின்றனர். இதற்கு அரசு முடிவு கட்ட வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X