பொது செய்தி

இந்தியா

அக்.,21 தமிழகத்தில் 2 தொகுதி இடைத்தேர்தல்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement

புதுடில்லி : அக்டோபர் 21 ல் ஒரே கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
அதே நாளில் தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். அதே நாளில் தமிழகத்தில் காலியாகியுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. நாங்குநேரில் எம்எல்ஏ வசந்தகுமார் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றும் எம்பியானதாலும்,விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானதாலும் இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.


டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறுகையில், அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முறையே நவ.,2 மற்றும் நவ.,9 ல் முடிவடைகிறது.
அரியானாவில் 1.82 கோடி மற்றும் மகாராஷ்டிராவில் 8.94 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின் போது பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒரு தொகுதிக்கு ரூ.28 லட்சம் செலவு செய்யலாம். பண பட்டுவாடாவை தடுக்க கண்காணிக்க ஏற்பாடு. வேலூர் தேர்தலுக்கு சென்ற 2 கண்காணிப்பாளர்கள் அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அனுப்பப்படுவர். என்றார்.


தேர்தல் தேதி விபரம் :


மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தல் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள 64 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ம் தேதி நடத்தப்பட உள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளிலும் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.


latest tamil news




சட்டசபை தேர்தல் விபரம் :


செப்.,23 வேட்புமனு தாக்கல் துவக்கம்அக்.,4 வேட்புமனு தாக்கல் நிறைவுஅக்.,5 வேட்புமனுக்கள் சரிபார்ப்புஅக்.,7 வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்அக்.,21 ஓட்டுப்பதிவுஅக்.,24 ஓட்டு எண்ணிக்கை


64 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் :


செப்.,23 வேட்புமனு தாக்கல் துவக்கம்செப்.,30 வேட்புமனு தாக்கல் நிறைவுஅக்.,1 வேட்புமனுக்கள் பரிசீலனைஅக்.,3 வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி தேதிஅக்.,21 ஓட்டுப்பதிவுஅக்.,24 ஓட்டு எண்ணிக்கை

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-201900:57:26 IST Report Abuse
ருத்ரா வெளி நாட்டு இலவசப் பயணம் கூட அறிவிக்கப் படலாம். சில கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மாணவர் களுக்கு பரிட்சையே ரத்து செய்யப்டும். மய்யம் சார் Happy தானே. நீர்நிலை ஆக்ரமிப்பு, மண் அள்ளல் சட்டபூர்வ மாக்கப்படும். மக்கள் கோயில், நிலம், சிலை, திருமண விழாவில் பழித்தாலும் எதையும் மறந்து தீபாவளி செலவை பட்டுவாடா மூலம் பெறலாம். வந்தேமாதரம். மக்களே நம் நாடு நம்வாக்கு நம்உரிமை. இதை மனதிற் கொள்ளவும். மனசு கேட்காமல் இதையும் எழுதுகின்றேன்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
21-செப்-201921:09:48 IST Report Abuse
தமிழ் மைந்தன் முதல் தமிழன் சொல்வது உண்மையே........நிதி அமைச்சரால் பொருளாதாரத்தை உயர்த்த முடியாது.....ஆனால் ஊழல் திமுக வெற்றி பெற்றால் அவர்களிடம் உள்ள ஊழல் பணம் அரசுடமையாக்கப்பட்டால் .....பொருளாதாரம் வளரும்............அப்புறம் சுதந்திர தினம் என்று என கேட்க கூடாது...........
Rate this:
Cancel
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
21-செப்-201918:36:01 IST Report Abuse
Ramesh Sundram போராளீஸ் ஸ்டார்ட் மியூசிக் கோட்டார் /கோழி பிரியாணி ரெடி நாள் ஒன்றிற்கு ரூபாய் ஐநூறு விதம் வாங்கி கொள்ளுங்கள் கோஷம் ஒரே கோஷம் தான் மோடி ஒழிக வேறு எதுவும் உங்களுக்கு தெரியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X