பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு குப்பையில் கொட்டுது பணம்: தினமும் உரமாகிறது 18 டன் குப்பை

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019
Share
Advertisement
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு குப்பையில் கொட்டுது பணம்: தினமும் உரமாகிறது 18 டன் குப்பை

மேட்டுப்பாளையம்: நகரில் சேகரமாகும், 18 டன் குப்பையை உரமாக்கி விற்பதன் மூலம், மேட்டுப்பாளையம் நகராட்சி கூடுதல் வருவாய் ஈட்டதுவங்கியுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் 24 டன் குப்பை கழிவு சேகரிக்கப்படுகிறது. இது, நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.தற்போது நகராட்சி மக்கும், மக்காத என, குப்பையை தரம் பிரித்து, உரமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்காக, ரூ.1.10 கோடியில், நகராட்சி குப்பைக் கிடங்கிலும், நந்தவனம் அருகேயும், 10 வார்டுகளிலும், நுண் உரம் உற்பத்தி செயலாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளன. இதில், நந்தவனம் பகுதியில் அமைந்துள்ள மையத்தில், உற்பத்தி செய்த உரம் நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. உர விற்பனை நிகழ்ச்சியில், நந்தவன நிர்வாகிகள், நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறியதாவது:நகரில் அன்றாடம் சேகரமாகும், 24 டன் குப்பையில், 18 டன் குப்பையை உரம் தயாரிக்க பயன்படுத்த முடிகிறது. மக்காத குப்பையை, கோவை மதுக்கரையில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்புகிறோம்.நுண் உரம் செயலாக்க மையத்தை, நந்தவனத்தை பராமரிப்போர், நிர்வாகம் செய்கின்றனர். இங்கு இரண்டு நாட்களுக்கு ஆறு டன் காய்கறி மற்றும் மக்கும் குப்பையை அரைத்து, அதை, 14 தொட்டிகளில் கொட்டுகின்றனர். அதில், மண்டை வெல்லம் கரைசல், தயிர், தவிடு ஆகியவற்றை கலந்து தெளிக்கின்றனர்.

இதை, இரு நாட்களுக்கு ஒருமுறை கிளறி விடுகின்றனர். இப்படி, 48 நாட்கள் கிளறிக் கொண்டே இருந்தால், ஈரப்பதம் முற்றிலும் குறைந்து, காய்ந்த உரமாக மாறி விடுகிறது.இந்த உரத்தில் உள்ள சத்துக்களை அறிய, ரசாயன பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். உரம் ஒரு கிலோ, 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை விவசாயிகளும் வீட்டுத் தோட்டம் போட்டுள்ளவர்களும் விரும்பி வாங்குகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் நகராட்சிக்கு நல்ல வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X