பொது செய்தி

இந்தியா

நிரந்தர அரசியல் சாசன அமர்வு அமைகிறது

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (10)
Advertisement
சுப்ரீம் கோர்ட், அரசியல்சாசன அமர்வு

புதுடில்லி: 70 ஆண்டு கால சுப்ரீம் கோர்ட் வரலாற்றில், முதன்முறையாக நிரந்தரமான அரசியல்சாசன அமர்வு அமைய உள்ளது. வரும் அக்., 1 ல் இந்த அமர்வு அமைய உள்ளது.

கடந்த 1950 முதல் 8 நீதிபதிகளுடன் செயல்பட துவங்கிய சுப்ரீம் கோர்ட்டில் தற்போது 34 நீதிபதிகள் உள்ளனர். வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கோகோய் கடிதம் எழுதினார். இதன் அடிப்படையில் சமீபத்தில், நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.

தற்போது வரை முக்கிய வழக்குகளை விசாரிக்கும் 2 நீதிபதிகள் அமர்வு, அந்த வழக்குகளில் ஏதேனும் முக்கிய சந்தேகங்கள் எழுந்தால், அதனை 3 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யும். இந்த அமர்வு தான், முக்கிய வழக்குகளை அரசியல்சாசன அமர்வுக்கு பரிந்துரை செய்யும். இதனை தொடர்ந்து, அரசியல் சாசன அமர்வில் இடம்பெறும் நீதிபதிகளை, தலைமை நீதிபதி தேர்வு செய்வார். கடந்த 30 ஆண்டுகளாக, அரசியல்சாசன அமர்வில் இடம்பெறும் 5 நீதிபதிகளை தேர்வு செய்வது தலைமை நீதிபதிக்கு பெரும் சவாலாக இருந்தது.
சட்டங்கள், முறைகேடுகள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் பொது நல மனுக்களில் பல முக்கிய கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதனால், அந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளை, அந்த வழக்குகளில் இருந்து விலக்கி, அரசியல்சாசன அமர்வில் இடம்பெற செய்வது தலைமை நீதிபதிக்கு பெரும் சவாலாக உள்ளது.






3 நீதிபதிகள் அமர்வுக்கு 2 நீதிபதிகள் அமர்வு பரிந்துரை செய்த 164 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்குகளை விசாரிக்க நிரந்தர 3 நீதிபதிகள் கொண்ட 5 அமர்வுகளை அமைக்கவும் தலைமை நீதிபதி முடிவு செய்துள்ளார்.தற்போது வரை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தினமும், ஒன்று அல்லது இரண்டு தான் செயல்படுகிறது. வேலைப்பளு காரணமாக, வழக்குகளை விரிவாக விசாரிக்க, இந்த அமர்வுக்கு போதிய நேரம் கிடைப்பது இல்லை.




தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்ற பிறகு, சுப்ரீம் கோர்ட்டிற்கு 14 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான பெருமை, கொலிஜியத்தின் தலைவர் என்ற முறையில், கோகாயையே சாரும். வரும் திங்கட்கிழமை 4 பேர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். இதனை தொடர்ந்து, நிரந்தர அரசியல்சாசன அமர்வை அமைப்பதற்கான நடவடிக்கையை தலைமை நீதிபதி துவக்க உள்ளார்.
தற்போது, அரசியல்சாசன அமர்வு முன்னர் 37 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 5 நீதிபதிகள் கொண்ட நிரந்தர அரசியல் சாசன அமர்வு மற்றும் 3 நீதிபதிகள் கொண்ட 5 அமர்வு அமைக்கப்பட உள்ளது. இதனால், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள 34 நீதிபதிகளில் 20 பேர் இடம்பெறுகின்றனர். மற்ற 14 நீதிபதிகள் மூலம் இரண்டு நீதிபதிகள் அமர்வுகள் ஏழு அமைக்கப்பட உள்ளது.
முன்ஜாமின் மற்றும் ஜாமின் மனுக்களை விசாரிக்க தனி நீதிபதியை நியமிக்க, தலைமை நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் சுப்ரீம் கோர்ட் விதிமுறைகளும் திருத்தப்பட உள்ளன. இது கடந்த 1980 முதல் அமலில் இருந்தது. நிலுவையில் உள்ள 60 ஆயிரம் வழக்குகளை விசாரிக்கும் வகையில் கூடுதலாக 7 அமர்வுகளை தலைமை நீதிபதி அமைக்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-செப்-201904:35:33 IST Report Abuse
J.V. Iyer மக்கள் பணத்தை விஞ்ஞான ஊழல் மற்றும் பிராடு செய்து ஏமாற்றுபவர்களை உடனே விசாரித்து தக்க தண்டனை கொடுத்து, ஏமாற்றிய பணத்தை வட்டியும் முதலுமாக வசூலித்து கொடுங்க எசமான். நாடு முன்னேறும். நாடு முன்னேற்றம் உங்கள் கையில் எசமான்.
Rate this:
Share this comment
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
22-செப்-201904:17:29 IST Report Abuse
N.K வழக்கு எண்ணிக்கை ஒன்றும் பெரிதல்ல, ஒரே வழக்கையே ஒன்பது முறை விசாரிப்பது, மேல் முறையீடு, கைது செய்ய தடை, தடைக்கு தடை, அந்த தடையை எதிர்த்து வழக்கு என்று போய்க்கொண்டே இருப்பதை நிறுத்துங்கள். முடிந்தவரை ஒரே அமர்வில் இறுதி தீர்ப்பை வழங்கி அதை உடனே நிறைவேற்றுங்கள் அப்புறம் நாட்டில் குற்றங்கள் எப்படி குறைகிறது என்று மட்டும் பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-செப்-201900:07:09 IST Report Abuse
Ramki மொதல்ல இந்த ஸ்டே ஆர்டர் , முன் ஜாமீன் , மேல் கோர்ட்டுக்கு முறையீடு , வாய்தா போன்றவற்றை தடை செய்தாலே பாதி கேஸுகள் முடிந்து போகும். அவற்றிற்கு ஏதேனும் உருப்படியா சட்டம் கொண்டுவாங்க அது இல்லாம, சமுத்திரத்திலே எப்ப அலை ஓயறது, எப்போ குளிக்கறது.என்று இருக்கிறது உங்களோட நீதித்துறை சட்டமும் , விதிமுறைகளும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X