பொது செய்தி

இந்தியா

ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement

நொய்டா : ஹெல்மெட் அணியாமல் பஸ்சை இயக்கியதாகக் கூறி பஸ் டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் உபி., மாநிலம் நொய்டாவில் நடந்துள்ளது.



latest tamil news



உபி.,யின் நொய்டாவை சேர்ந்தவர் நிரன்கர் சிங். இவர் நொய்டாவில் உள்ள பள்ளிகள் மற்றும் தனியார் கம்பெனிகளுக்கு வாடகைக்கு பஸ்கள் இயக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் 40 முதல் 50 பஸ்கள் உள்ளன. இந்நிலையில் இவரது நிறுவனத்தில் பணிபுரியும் பஸ் டிரைவர் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் பஸ்சை இயக்கியதாகவும், அதற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு செப்.,11 அன்று ஆன்லைன் மூலம் சலான் அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil news


இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிரன்கர் சிங், பஸ் டிரைவர் ெஹல்மெட் போடணுமா என வியப்படைந்தார். இது தொடர்பாக நிரன்கர் சிங் கூறுகையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இவ்வாறு அபராதம் வசூலிக்கப்படுகிறது. உண்மையில் எங்கள் மீது தவறு இருந்தால் அபராதம் செலுத்த தயார். ஆனால் போக்குவரத்து துறையின் இந்த பொறுப்பற்ற தவறுகளால் தினமும் நூற்றுக்கணக்கான சலான்கள் விநியோகிக்கப்படுகிறது. இது பற்றி கோர்ட்டில் முறையிட உள்ளேன் என்றார். இதற்கு முன் இதே பஸ்சின் டிரைவருக்கு சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறி 4 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
22-செப்-201909:05:54 IST Report Abuse
blocked user புகைப்பட ஆதாரத்தை இணைத்து இருந்தால் சூப்பராக இருந்திருக்கும். எனக்கென்னவோ இந்த பஸ் டிரைவர் டெக்கினிக்கலாக ஏமாற்றுவது போல தெரிகிறது.
Rate this:
Cancel
22-செப்-201900:36:32 IST Report Abuse
ஸாயிப்ரியா எனனமா டூட்டி கான்ஷியசாக பணி புரிகிறார்கள்.
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
21-செப்-201921:38:38 IST Report Abuse
Natarajan Ramasamy இயந்திரம் தப்பவதில்லை. அதில் அச்சுஎற்றும் மனிதன் தவறான code ஐ ஆச்சு ஏற்றினால் இது நிகழும் . கம்ப்யூட்டர் என்பது GARBAGE IN GARBAGE அவுட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X