மருமகளை தாக்கியதாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி மீது வழக்கு

Added : செப் 21, 2019 | கருத்துகள் (5)
Advertisement

ஐதராபாத்: வரதட்சணை கேட்டு, மருமகளை, தாக்கிய ஐ தராபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ராமமோகன ராவ், அவரது மனைவி, மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஐதராபாத் ஐகோர்ட் மற்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர் ராமமோகன ராவ். இவர் கடந்த 2017 ல் ஓய்வு பெற்றார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அவர் மீதும், அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது மருமகள் சிந்து போலீசில் புகார் அளித்துள்ளார். தனது மனுவில், கடந்த ஏப்ரல் 20 ம் தேதி தன்னை , மாமனார் ரமமோகன ராவ் கணவர் நூட்டி வசிஸ்டா ,மாமியார் துர்கா ஜெயலட்சுமி, ஆகியோர் தாக்கியதாகவும், ஆபாசமாக திட்டியதாகவும் கூறினார். தற்போது சிந்து தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளன. கடந்த 2019 ஏப்.,20 அன்று இரவு 11 மணியளவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், பெண் ஒருவர் தாக்கப்படும் காட்சியுடன் துவங்குகிறது. அதனை தொடர்ந்து, வயதான பெண் ஒருவர், அந்த பெண்ணின் கையை பிடித்து அமரவைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்த சிசிடிவி காட்சிகளையும், போலீசாரிடம் சிந்து அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahim Gani - Karaikudi,இந்தியா
21-செப்-201920:24:54 IST Report Abuse
Rahim Gani ஊருக்கெல்லாம் நீதி சொல்லும் நீதிமான் வரதட்சணைக்காக தனது மருமகளை தலை முடியை பிடித்து இழுத்து அடிக்கும் அந்த சிசிடிவி காட்சி பதறவைப்பதாக இருக்கிறது ,இவரை கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
21-செப்-201919:27:10 IST Report Abuse
 Sri,India அந்த ஆளை பார்த்தல் லோக்கல் தாத்தா முன்னாள் நீதிபதியா?? தாதாவா ??
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-செப்-201918:25:12 IST Report Abuse
தமிழ்வேல் ஜட்ஜுக்கு கைநீளமாச்சே... அதனாலயோ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X