உலக நாடுகளுக்கு சீனா அச்சுறுத்தல்: டிரம்ப்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
China, World, Military Rapidly, Donald Trump, சீனா, டிரம்ப்,  ராணுவம்

வாஷிங்டன்: மற்ற நாடுகளை விட பெரிய அளவில் ராணுவத்தை கட்டமைத்து வரும் சீனா, உலகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் கூறியதாவது: மற்ற நாடுகளை விட வேகமாக ராணுவத்தை கட்டமைத்து வரும் சீனா, உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதற்காக, அந்த நாடு அமெரிக்க பணத்தை பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் 500 பில்லியன் டாலர் பணத்தை, சீனா எடுத்து கொள்ள அமெரிக்க முன்னாள் அதிபர்கள் அனுமதித்தனர். எங்களின் அறிவுசார் சொத்துரிமையையும் சீனா திருடவும் அனுமதித்தனர். ஆனால், அதனை நான் விட மாட்டேன்.


latest tamil news


வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்காவும் சீனாவும் செயல்பட்டு வருகின்றன. சீன பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இது அடுத்து வரும் நாட்களிலும் அதிகரிக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
22-செப்-201907:01:21 IST Report Abuse
blocked user கம்முனிசம் என்பது கிட்டத்தட்ட தீவிரவாத அடக்குமுறை ஆட்சி போன்றது. நல்லதும் கெட்டதும் அதிக அளவிலேயே இருக்கும். வறுமை ஓரளவுக்கு குறைவாகவே இருக்கும். சுதந்திரமா. மூச்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
21-செப்-201921:36:25 IST Report Abuse
Nallavan Nallavan இந்திய-சீன யுத்தம் வருகிறதோ இல்லையோ, அமெரிக்க-சீன யுத்தம் வர வாய்ப்பிருக்கிறது .....
Rate this:
Cancel
Kudandhaiyaar - kumbakonam,இந்தியா
21-செப்-201921:18:38 IST Report Abuse
Kudandhaiyaar அமெரிக்க ஐயா உங்களுடைய கூற்று தினமும் ஒரு கூத்து. ஒரு நாள் அதிகம் வரி விதிப்பேன். அடுத்த நாள் பேச்சு நல்ல பலன் என்பீர்கள். அடுத்த நாள் மறுபடியும் வேறு விதமான வரிவிதிப்பு. மறுபடியும் பேச்சு. கிட்டத்தட்ட 8 மாதங்களாக இதுதான் நடக்குது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X