பொது செய்தி

இந்தியா

சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
Andhra govt,eviction notice, chandrababu, chandrababu naidu, Naidu, vacate house,  சந்திரபாபு, வீடு, ஆந்திர அரசு,

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு, அமராவதி நகரில் தங்கியுள்ள வீட்டை இடிக்க, ஜெகன்மோகன் அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, ஆந்திர பிரதேச தலைநகர் மேம்பாட்டு வாரியம்(ஏபிசிஆர்டிஏ), ஒட்டியுள்ள அந்த நோட்டீசில், 7 நாட்களுக்குள் வீட்டை இடிக்க வேண்டும். தவறினால், அரசு சார்பில் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு தங்கியுள்ள வீடு, லிங்கமனேனி ரமேஷ் என்பவருக்கு சொந்தமானது. இந்த வீடு, நதி பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை இடிக்கவும் கடந்த மாதம், ஏபிசிஆர்டிஏ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு, ரமேஷ் அளித்த பதிலில், வீடு கட்ட முறையாக அனுமதி வாங்கப்பட்டுள்ளது. ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது, உண்டவள்ளி கிராம பஞ்சாயத்து அனுமதி கொடுத்ததாக, அரசிடமும் அனுமதி வாங்கப்பட்டிருந்ததாக கூறியிருந்தார். ஆனால், இந்த பதிலில் திருப்தி அடையாத ஏபிசிஆர்டிஏ அதிகாரிகள், கிராம பஞ்சாயத்து கொடுத்த அனுமதியை ஏற்க முடியாது எனக்கூறிவிட்டனர்.


latest tamil news


இது குறித்து ஓய்எஸ்ஆர் காங்., கட்சி செய்தி தொடர்பாளர் பார்த்தசாரதி கூறுகையில், முந்தைய தெலுங்கு தேச அரசில், நதிக்கரையோரம் கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என அறிவித்தது. ஆனால், சந்திரபாபு தங்கியுள்ள கட்டடம் அரசுக்கு சொந்தமானது எனக்கூறி விலக்கு அளித்தது. ஆனால், ஜெகன் அரசு நோட்டீஸ் அனுப்பிய பின்னர், சந்திரபாபு தனது குரலை மாற்றி, வீடு, ரமேஷ்க்கு சொந்தமானது எனவும், தான் வாடகைக்கு குடியிருப்பதாகவும் கூறுகிறார். இதனால், அந்த வீட்டை இடிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சட்டத்தை மதிப்பவராக சந்திரபாபு இருந்தால், அரசியல் பிரச்னை ஆக்காமல், உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தெலுங்கு தேசம் கட்சி செய்தி தொடர்பாளர் அனுராதா கூறுகையில், இந்த நோட்டீசானது, ஜெகன் மோகன் அரசின் சதி. சந்திரபாபுவுக்கு பிரச்னை ஏற்படுத்தி தெருவில் நிற்க வைக்க வேண்டும் என நினைக்கின்றனர். வீடு கட்ட, ஓய்எஸ்ஆர் அரசில் அனுமதி வழங்கப்பட்டது என்பதை ஏபிசிஆர்டிஏ அதிகாரிகள் ஏற்று கொண்டனர்.இதனால், தனது தந்தை ராஜசேகர ரெட்டியை, ஜெகன்மோகன் குறைசொல்கிறாரா? வீடு கட்ட அனுமதி கொடுத்த ஆளுங்கட்சி எம்எல்ஏ மல்லடி விஷ்ணுவை நீக்குவாரா? அரசியல் பழிவாங்குவதற்காக பிரஜிகா வேதிகாவில் இருந்த ஆலோசனை கூடத்தை இடித்த ஜெகன்மோகன் அரசு, தற்போது சந்திரபாபுவுக்கு வீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, வீட்டையும் இடிக்க வேண்டும் என நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-201911:14:39 IST Report Abuse
நக்கல் அடிச்சின்னு சாவுங்க...
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
22-செப்-201909:02:24 IST Report Abuse
வல்வில் ஓரி நாய்டு மணவாட்டிலு எல்லாம் ரெட்டியை யேசுறானுவோ
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
22-செப்-201907:04:08 IST Report Abuse
oce அடுத்த ஆட்சி ஜகனிடமிருந்து மீளவும் சந்திர பாபு நாயுடு கை மாறும். இந்த ஆட்டம் ஒரு ஐந்தாண்டு காலம் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X