எல்லையில் பாக்., படைகள் தாக்குதல் இரண்டு மாவட்டங்களில் பதற்றம்

Added : செப் 21, 2019
Advertisement

ஜம்மு, :ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படையினர், கடந்த இரண்டு நாட்களாக, தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதிகளில், பள்ளிகள் மூடப்பட்டன. வீடுகளில் வளர்க்கப்பட்ட, 16 பிராணிகள், துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த மாதம், 5ம் தேதி ரத்து செய்யப்பட்ட பின், இந்தியா - பாக்., இடையே, பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதிகளில், பாக்., படையினர், திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு, நம் ராணுவ வீரர்கள், பதிலடி கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில், எல்லை பகுதிகளான, ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில், பல்வேறு இடங்களில், நேற்று முன்தினம் இரவு, பாக்., படையினர், திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, துப்பாக்கி சூடு மற்றும் பீரங்கி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நம் வீரர்கள், பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதில், எல்லைப் பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த பசு மாடுகள் உட்பட, 16 பிராணிகள் பலியானதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூரில், எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பல பள்ளிகளுக்கு, நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்த திடீர் தாக்குதல்களால், எல்லை மாவட்டங்களில், பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, ஜம்மு - பதான்கோட் நெடுஞ்சாலையில், போலீசார், கடந்த வாரம் சோதனையில் ஈடுபட்ட போது, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை ஏற்றி வந்த வேனை, பறிமுதல் செய்தனர். அதில் இருந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவர்களுக்கு உதவி செய்து வந்த, புல்வாமாவை சேர்ந்த, வேன் உரிமையாளர் சுஹில் அகமது லத்துா மற்றும் பஷீர் அகமது ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X