சிங்கப்பூரின் தந்தைக்கு சென்னையி்ல் படத்திறப்பு

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement






பிறந்தோம் இருந்தோம் முடிந்தவரை தனக்கும் தன் சந்ததிக்கும் சொத்து சேர்த்தோம் பின் இருந்த இடமும் தெரியாமலும், வாழ்ந்த தடம் இ்ல்லாமலும் இறந்து போகும் மனிதர்கள் மத்தியில் சிலர்தான் மக்கள் மத்தியில் எப்போதும் வாழ்கின்றனர்.




அவர் களில் 99 சதவீதத்தினர் மண்ணின் மைந்தர்களாக இருப்பர் ஒரு சதவீதம்தான் அன்னிய தேசத்தை சேர்ந்தவர்களாக இருப்பர்.
அவர்களில் ஒருவர்தான் சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த லீ குவான் யூ.சென்னையில் அவரது நினைவு தினமான நேற்று தமிழ்நாடு சிங்கப்பூர் நல்லுறவு கழக அமைப்பினர் அவரது படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினர்.
ஏழ்மை உள்ளீட்ட ஏாராளமான பிரச்னைகளால் துரத்தப்பட்டு சிங்கப்பூர் சென்ற பல ஆயிரக்கணக்கான தமிழர்களை வாரி அனைத்துக் கொண்டது மட்டுமின்றி அவர்கள் வாழ்க்கையில் கொஞ்சமும் கனவு கண்டிராத வளத்தையும் வாரி வழங்கிக் கொண்டிருப்பது சிங்கப்பூர்தான்.தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தந்து ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை உயர்த்தியதும் சிங்கப்பூர்தான்.
இதற்கு காரணமான சிங்கப்பூரின் தந்தையான லீக்கு எப்போதும் மரியாதை செலுத்திக் கொண்டிருக்கிறோம் அதன் ஒரு நிகழ்வுதான் இது என்றனர்.
வளத்திற்கு, மக்கள் நலத்திற்கு, சுத்தத்திற்கு,ஊரின் மொத்த சுகாதாரத்திற்கு, செல்வச் செழிப்பிற்கு என்று எல்லாவற்றுக்கும் உதாரணமாக சொல்லும் நாடாகவும், ஊர் சுற்றிப்பார்க்க விரும்பும் மக்கள் செல்லும் முதல் நாடாகவும் சிங்கப்பூரை மாற்றியமைத்தவரான லீ கொண்டுவந்து பல மாற்றங்களைத்தான் இன்று உலக நாடுகள் ஒன்றொன்றாக கொண்டுவருகின்றன.
வருகைப்பதிவிற்கு பயோ மெட்ரிக் சிஸ்டத்தை இப்போதுதான் நாம் கொண்டுவந்து கொண்டு இருக்கிறோம் ஆனால் இதை பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவந்தது மட்டுமின்றி பல ஆண்டுகளாக சரியான நேரத்திற்கு அலுவலகம் வருபவர்களில் முதல் ஆளாகவும் அதிபர் லீ இருந்தார் என்று பாராட்டிப் பேசிய அவ்வை நடராசன் சொன்ன போது பலரும் வியந்து போயினர்.
அதிபராக இருந்த முப்பது ஆண்டுகளிலும் பழங்கதை பேசி பெருமைப்பட்டுக் கொண்டதில்லை மக்களுக்கும் நாட்டிற்கும் இன்று என்ன செய்யப்போகிறேன் என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு நாளையும் துவங்கியவர் அவர்.
சின்ன சின்ன குற்றங்களுக்கு எல்லாம் பெரிய தண்டனை கொடுப்பார்களே என்று சிலர் குற்றம் சொல்லக்கூடும் ஆனால் அந்தப் பயம்தான் அந்த நாட்டை குற்றமி்ல்லாத தேசமாக்கி வைத்துள்ளது என்பது அங்கு இருப்பவர்களுக்கும் தெரியும் சென்று வந்தவர்களுக்கு புரியும்.
லஞ்சமும் ஊழலும் இல்லாத ஒரு நாளைக்கூட நாம் நம் தேசத்தில் கடந்து விடமுடியாது ஆனால் சிங்கப்பூர் மக்களின் தேகத்தில் ரத்தத்தில் அது கெட்ட வார்த்தையாக பதிந்து போய் கிடக்கிறது
மொத்தத்தில் மூன்று மணி நேர பயணத்தி்ல் சிங்கப்பூர் சென்று விடலாம் ஆனால் இன்னும் எத்தனை வருடங்கள் பயணித்தால் நாம் சிங்கப்பூரின் நிலையை அடையமுடியுமோ தெரியவி்ல்லை.?
-எல்.முருகராஜ்.
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - coimbatore,இந்தியா
06-அக்-201902:44:23 IST Report Abuse
Raj சிங்கப்பூர் களவாணிகள் பணம் சலவை செய்யப்படும் நாடு...சீனர்களுக்கு முதலில் ஹாங்காங் , தைவான் அப்புறம் பணத்தை பதுக்க சிறந்த இடம் சிங்கப்பூர், மலேஷியா. உண்மையான ஜனநாயகம் இல்லாத ஒரு நாடு. அதனால் தான் சிவகங்கை சீமான், டீ.டீ.வி தினகரன், ஸ்டாலின் போன்றோர் அங்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X