பொது செய்தி

இந்தியா

பீகாரில் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் துவக்கம்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement

பாட்னா: பீகாரில் முதலாவது மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிசை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் துவக்கி வைத்தார்.






பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள மாநில அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலக வளாகத்தில் இதனை துவக்கிவைத்தார். விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் கூறியதாவது: தற்போது துவக்கிவைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் முழுவதும் மகளிர் மட்டுமே செயல்படுவர் .

தலைமை அதிகாரி முதல் தபால்களை வினியோகம் செய்பவர்கள் வரை மகளிர் மட்டுமே பணியில் ஈடுபடுவர்.மேலும்மாநிலஅரசு பணி தேர்வாணையத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்த மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் உதவி செய்யும் என்றார்.





தொடர்ந்து மாநிலத்தின் முதலாவது ஆதார் கேந்திர மையத்தை துவக்கிவைத்தார். இது நாட்டின் 10 வது ஆதார் கேந்திர மையமாகும். இது குறித்து அவர் கூறுகையில் நாள் தோறும் இந்த ஆதார் கேந்திர மையம் ஆயிரம் ஆதார் கார்டுகளை வழங்க கூடியவை. விரைவில் இவை 3 ஆயிரம் சதுர அடி அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படும் என கூறினார்.

இந்தியாவின் முதல் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் புதுடில்லியில் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
22-செப்-201905:57:46 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) Such post office was established much earlier in Coimbatore when Shree T Paneerselvam ,IPoS (Late) was DPS at Western Region.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X