சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை

Added : செப் 21, 2019
Advertisement
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை

சென்னை, சென்னை, நங்கநல்லுாரில், ஏற்றுமதியாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 120 சவரன் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், 1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, நங்கநல்லூர், எஸ்.பி.ஐ., காலனி விரிவு, இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 52; கிரானைட் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.
கதவு உடைப்பு

இவரது மனைவி கோமலவள்ளி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ரமேஷ், சில நாட்களுக்கு முன், சபரிமலைக்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை, கோமலவள்ளி, பிள்ளைகளுடன், எழும்பூர் சென்று, இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் கீழ் தளம், முதல் தளத்தில் இருந்த, பீரோ லாக்கர்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 120 சவரன் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், 1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.தகவலறிந்து, சென்னை, தெற்கு மண்டல இணை கமிஷனர், மகேஸ்வரி, துணை கமிஷனர், பிரபாகர் ஆகியோர், கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று, விசாரணை நடத்தினர்.பழவந்தாங்கல் போலீசார், வழக்குப் பதிவு செய்தனர். பரங்கிமலை உதவி கமிஷனர், சங்கரராமன், சேலையூர் உதவி கமிஷனர், சகாதேவன் ஆகியோர் தலைமையில், ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளை குறித்து விசாரணை துவக்கப்பட்டுள்ளது.தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. கொள்ளை நடந்த வீட்டின், சுற்றுவட்டார பகுதி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தேடுதல் வேட்டைஇதில், கொள்ளை சம்பவம் மாலையில் நடந்துள்ளதும், வடமாநிலத்தைச் சேர்ந்த மூவர், இதை அரங்கேற்றி உள்ளதும், உறுதி செய்யப்பட்டது. அவர்களின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளதால், அவற்றை ஆதாரமாக கொண்டு, தனிப்படையினர், கொள்ளையன்களை தேடி வருகின்றனர்.
மேலும், கொள்ளையன்களை நேரில் பார்த்ததாக, இளைஞர் ஒருவர் கூறியுள்ளார். அவருடைய உதவியுடன், தனிப்படையினர் கொள்ளையன்களை தேடி வருகின்றனர்.பெரும்பாலும், வடமாநிலத்தவர்கள், திருவல்லிக்கேணி, 'மேன்ஷன்' பகுதியில் தங்குவது வழக்கம். அங்கும், தனிப்படையினர் தேடுதல் வேட்டையை துவக்கி உள்ளனர்.
நீண்ட நாட்களாக நோட்டம்!
ரமேஷ் வீட்டிற்கு எதிரில், கட்டுமான பணி நடந்து வருகிறது. அங்கு, பல மாதங்களாக, வெளி மாநிலத்தவர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் மூலம், ரமேஷின் வீடு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டிருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், ரமேஷின் வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர்கள் மூலம், கொள்ளையன்களுக்கு தகவல் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X