அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேனர் விவகாரத்தில் பிரமாண பத்திரம்: அ.தி.மு.க., தயங்குவது ஏன்?

Updated : செப் 22, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
பேனர், பிரமாண பத்திரம், அ.தி.மு.க., தி.மு.க., சுபஸ்ரீ, சென்னை உயர்நீதிமன்றம்,

'பேனர், கட் -அவுட்' கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தி.மு.க., சார்பில், உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அ.தி.மு.க., உள்ளிட்ட, மற்ற கட்சிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயக்கம் காட்டுகின்றன. பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின், அதை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம், அக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.


அதிர்வலை

சென்னை, பள்ளிக்கரணை அருகே, 12ம் தேதி, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர், ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக, சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில், ஒரு பேனர் சரிந்து விழுந்ததில், அவ்வழியே, இருசக்கர வாகனத்தில் சென்ற, குரோம்பேட்டையை சேர்ந்த, தனியார் நிறுவன மென்பொறியாளர், சுபஸ்ரீ, 23, தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த, குடிநீர் லாரி மோதி இறந்தார். இச்சம்பவம், தமிழகம் முழுவதும், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பேனர் கலாசாரத்திற்கு எதிராக, குரல்கள் ஒலித்தன.

சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வில், வழக்கறிஞர்கள் லக்ஷ்மிநாராயணன், கண்ணதாசன் ஆகியோர் முறையிட்டனர். அத்துடன், விதிமீறல்பேனர்கள் தொடர்பாக, 'டிராபிக்' ராமசாமி தொடர்ந்த வழக்கையும், நீதிபதிகள் விசாரித்தனர்.

அப்போது, 'பேனர்கள் வைக்கக் கூடாது என, தங்கள் கட்சியினருக்கு, அதன் தலைவர்கள் அறிவித்தால் என்ன' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின், 'தி.மு.க., -- அ.தி.மு..க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், எந்த நிகழ்ச்சிக்கும் பேனர்கள் வைக்கக் கூடாது என, தொண்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்; அதை, பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க.,- சார்பில், பிரமாணப் பத்திரத்தை, அதன் அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி, தாக்கல் செய்தார்.

அதில், கூறியிருப்பதாவது:கடந்த, 2017 ஜனவரி, 29ல், தி.மு.க., செயல் தலைவராக, ஸ்டாலின் இருந்தபோது, கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், 'கட்சி அல்லதுபிற நிகழ்ச்சிகளுக்கு, சட்டவிரோத பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்- அவுட்டுகள் போன்றவை வைக்கக் கூடாது' என, எச்சரித்திருந்தார். அடுத்து, 2018 ஜூன், 19ல், தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிவிப்பில், 'ஆர்வமிகுதியால், சிலர் பேனர்கள் வைப்பது தொடர்கிறது; அதையும் தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. சுபஸ்ரீ மரணத்திற்கு பின், 'பொது மக்களுக்கு இடையூறாக, பேனர்கள், கட் - -அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 13ம் தேதி, ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.


அங்கீகாரம் ரத்து

பேனர், கட்- - அவுட், பிளக்ஸ் போர்டுகளை கட்டுப்படுத்த, தி.மு.க., எடுக்கும் நடவடிக்கைகளை, நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்து வருவதற்காக, இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மதித்து, தி.மு.க., செயல்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் அறிவுறுத்தலை ஏற்று, முதல் கட்சியாக, தி.மு.க., பிரமாண பத்திரம், தாக்கல் செய்தது. ஆனால், பிற கட்சிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல், மவுனம் காத்து வருகின்றன. நீதிமன்றத்தில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின், கட்சி தலைமை உத்தரவை மீறி, கட்சியினர் யாரேனும், பேனர் அல்லது கட் அவுட் வைத்தால், அதற்கும் கட்சி தலைமையே, பொறுப்பேற்க வேண்டும்.மேலும், சம்பந்தப்பட்ட கட்சி மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு வழக்கு தொடரப்பட்டால், அதை கட்சி தலைவர்களே சந்திக்க வேண்டும். மேலும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின், அதை மீறி பேனர் வைத்தால், கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, தேர்தல் ஆணையத்திடமும் வலியுறுத்தலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், கலக்கமடைந்த, பிற கட்சிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல், அமைதி காத்து வருகின்றன.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-செப்-201918:35:38 IST Report Abuse
D.Ambujavalli இதோ, அமித் ஷா, பிரதமர் எல்லாரும் வரும்போது ஒரு ஐந்நூறு பேனர்கள், வைத்து தங்கள் ‘விசுவாசத்தை’ காட்ட வேண்டாமா? சும்மா பிரமாண பத்திரம் கொடுத்து விட்டால் இந்த விளம்பரமெல்லாம் பாழாகிவிடாதா? இன்னும் ஒரு பத்துபேர்தான் சாகட்டுமே எது முக்கியம்? எங்கள் உறவினர் ஒருவர் திருவான்மியூரில் பேனர் சாய்ந்து, நல்ல காலம் , சும்மா பத்து நாள் மருத்துவமனை வாசம், காலில் சிறு ஊனம் என்று தப்பித்தார். அவரிடம் கேளுங்கள் அந்த அனுபவம்’ எப்படி உயிர் போய் உயிர் வந்ததென்று அப்படி செத்தால், இருக்கவே இருக்கு, பிரெஸ் ஓனர், மை விற்றவர், இறந்தவர்களின் பெற்றோர் ஏன் பெறறார்கள் என்று அவர்கள்மேல் கேஸ் போட்டால் போச்சு
Rate this:
Share this comment
Cancel
Srinivas - Chennai,இந்தியா
22-செப்-201916:58:25 IST Report Abuse
Srinivas அப்பாவி இளம்பெண் இறப்பிற்கு காரணமான அடிமைக்கட்சி கொலைகாரனை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை. அடிமைக்கட்சி மங்குணிகளும் அந்த கொலைகாரனை கட்சியைவிட்டு நீக்கவில்லை. இப்போது பேனர் வைப்பதுபற்றி வாய் திறக்கவும் இல்லை. அடிமை மங்குணிகள் மேடையில் பேசுவது என்னவோ மக்கள் நலனுக்காகவே இந்த அரசு செயல்படுகிறது என்று வாய்கூசாமல், வெட்கம் இல்லாமல் பிதற்றுவது தமிழக ஆட்சியின் கோமாளித்தனத்திற்கு ஒரு சிறந்த உதாரணம்.
Rate this:
Share this comment
Gopinathan S - chennai,இந்தியா
23-செப்-201919:26:04 IST Report Abuse
Gopinathan Sசாணியை கரைச்சு தலையில் ஊத்தினாலும் அவனுங்க திருந்த மாட்டானுங்க......
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
22-செப்-201908:27:59 IST Report Abuse
RajanRajan கூட்டு களவாணிகளின் அம்மாவழி சமாதி இதை அனுமதிக்கவில்லையோ என்னவோ.
Rate this:
Share this comment
Srinivas - Chennai,இந்தியா
22-செப்-201919:10:22 IST Report Abuse
Srinivas''கூட்டு களவாணிகள்'' இப்போது கேட்பது...அம்மா என்றால் யார்? என்பதுதான். அம்மையாரை அடிமை மங்குணிகள் மறந்து வெகுநாட்கள் ஆகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X