அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., - தி.மு.க., நட்பு மலருமா?

Updated : செப் 22, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (51)
Advertisement
பா.ஜ., தி.மு.க., நட்பு மலருமா, ஆட்சி மாற்றம்

மிழக கவர்னரின் ஆலோசனையை ஏற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுக்கு எதிராக அறிவித்த, கண்டன ஆர்ப்பாட்டத்தை, தி.மு.க., வாபஸ் பெற்றது, அ.தி.மு.க., தலைமையிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., அரசு, மத்திய, பா.ஜ., அரசுடன் இணக்கமாக உள்ளது. மத்திய அரசின், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' உள்ளிட்ட திட்டங்களை, தமிழகத்தில் செயல்படுத்த, தமிழகஅரசு முனைப்பு காட்டுகிறது. இதற்கு, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதனால், 'தி.மு.க., அதிக, எம்.பி.,க்களை வைத்திருந்தாலும், பா.ஜ., அணியில் சேராது; 2021 வரை, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை' என, அ.தி.மு.க.,வினர் உறுதியாக நம்புகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, 'நாடு முழுவதும், ஒரே மொழி என்பது அவசியம்; ஹிந்தி தான், அந்த அடையாளத்திற்கு உரிய மொழி' என, சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., சார்பில், இம்மாதம், 20ல், கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 'என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது; நானும் ஹிந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன் தான்' என, அமித்ஷா விளக்கம் அளித்தார். இம்மாதம், 18ல், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சென்னை, ராஜ்பவனுக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலினை அழைத்து பேசினார். பின், அறிவாலயத்தில், கட்சி, எம்.பி.,க்களுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து, ஸ்டாலின், 'உள்துறை அமைச்சரின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது; தமிழகத்தில், ஹிந்தி திணிக்கப்படாது என, கவர்னர் கூறினார்; இதனால், தி.மு.க., நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைக்கிறோம்' என்றார்.

சில மாதங்களுக்கு முன், மாவட்டங்களில் ஆய்வு கூட்டங்களுக்கு சென்ற, கவர்னருக்கு எதிராக, தி.மு.க., சார்பில், கறுப்பு கொடி போராட்டங்கள் நடத்தப்பட்டன. மத்திய அரசையும், தி.மு.க., கடுமையாக விமர்சித்து வருகிறது. இப்படி இருக்கும் சமயத்தில், கவர்னரின் அழைப்பை ஏற்று, தி.மு.க., போராட்டத்தை கைவிட்டது, பா.ஜ.,வுடன், வருங்காலத்தில், அக்கட்சி நட்பு பாராட்ட விரும்புவதை காட்டுவதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால், தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைக்கும் நிலை ஏற்பட்டால், பா.ஜ.,வுக்கு, தி.மு.க., வைக்கும் கோரிக்கை, அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதாக தான் இருக்கும். இதனால், அ.தி.மு.க., தலைமை அதிர்ச்சியில் உள்ளது. இவ்வாறு, ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. -

நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
28-செப்-201913:10:21 IST Report Abuse
I love Bharatham தற்கொலைக்கு சமம் ......
Rate this:
Share this comment
Cancel
sam - Bangalore,இந்தியா
27-செப்-201913:43:52 IST Report Abuse
sam Is it possible. BJP is ஹிந்துதுயா ஆனா திமுக ஹிந்து Atheist ?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-செப்-201919:48:11 IST Report Abuse
Nallavan Nallavan பாஜக திமுக -வுடன் கூட்டணி வைத்தால், எலியும், தவளையும் நட்பு பூண்ட கதைதான் ......
Rate this:
Share this comment
venkat - chennai,இந்தியா
25-செப்-201914:22:40 IST Report Abuse
venkatபாஜக தீய முக வுடன் கூட்டணி வைத்தால் பாஜக மீது இருக்கும் மதிப்பும், நம்பிக்கையும் கெட்டுவிடும். பாஜகவிற்கு வோட்டு போடும் பலர் இதனை ஏற்று கொள்ள மாட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X