அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவை சேர்க்க ரகசிய பேச்சு: அ.தி.மு.க.,வில் மீண்டும் குழப்பம்

Updated : செப் 23, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement
சசிகலா, அ.தி.மு.க., ரகசிய பேச்சு,குழப்பம்

சிறையிலிருந்து வெளியே வந்ததும், சசிகலாவை, அ.தி.மு.க.,வில் சேர்ப்பதற்கான ரகசிய பேச்சு நடந்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மறைந்ததும், அவரது தோழி சசிகலா, அ.தி.மு.க., பொதுச்செயலரானார். அவருக்கு எதிராக, பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கினார். அவரின் பின்னால், சசிகலா எதிர்ப்பாளர்கள் அணிவகுத்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறை சென்றதும், முதல்வராக தினகரன் முயற்சித்தார். அவரை, கட்சியை விட்டு வெளியேற்றினர். சசிகலா குடும்பத்தினரையும், கட்சியை விட்டு விலக்கி வைப்பதாக அறிவித்தனர். இனிமேல், 'சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த யாரையும், கட்சியில் சேர்க்க மாட்டோம்' என, அமைச்சர்கள் கூறினர். இதை, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் நம்பினர்.

அரசியல் செல்வாக்கை இழந்த, சசிகலா குடும்பத்தினர், மீண்டும் அதிகாரத்திற்கு வர விரும்புகின்றனர். அதற்கு, அ.தி.மு.க.,வை விட்டால், வேறு வழியில்லை என்பதால், முதல்வர் தரப்பினரிடம், பேச்சு நடத்தி உள்ளனர். தினகரனை தவிர்த்து மற்றவர்களை, கட்சியில் இணைத்து கொள்ளும் படியும், தங்களால் கட்சிக்கோ, ஆட்சிக்கோ, எந்த பிரச்னையும் வராது என்றும் கூறி உள்ளனர். இது தொடர்பாக, சசிகலாவிடமும், அவரது உறவினர்கள் பேசியுள்ளனர்.

நன்னடத்தை விதிகள் காரணமாக, சசிகலா, இந்த ஆண்டே சிறையிலிருந்து வெளியில் வரலாம் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர் வெளியில் வந்ததும், அவரை கட்சியில் இணைத்து, பொதுச்செயலர் பதவி வழங்கும்படி, அவரது தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். அவர் பொதுச்செயலர் ஆனாலும், தற்போதுள்ளபடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர், இ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளராகவும் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு, முதல்வர் தரப்பில், சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன், சசிகலாவின் ஆதரவாளரான, லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தனியாக சந்தித்து பேசி உள்ளார். முதல்வர் மற்றும் துணை முதல்வரை சமாதானப்படுத்தி, சசிகலாவை கட்சியில் இணைக்க, மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் அனைத்தும்,ரகசியமாக நடந்து வருகின்றன. சசிகலா, மீண்டும் கட்சியில் இணைக்கப்படுவார் என்ற தகவல், அ.தி.மு.க., தொண்டர்களிடம், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:சசிகலா குடும்பத்தில்,தினகரன் தவிர மற்றவர்களை, கட்சியில் இணைக்க, சிலர் கட்சி தலைமையுடன் பேசுவதாக, தகவல்கள் வெளி யாகி உள்ளன. சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் இணைத்தால், மீண்டும் கட்சி, அந்த குடும்பத்தின் பிடியில் சென்று விடும். இதை, பெரும்பாலான அமைச்சர்களே விரும்பவில்லை. எனவே, சசிகலா மற்றும்அவரது குடும்பத்தினரை, கட்சியில் சேர்க்க, முதல்வர் மற்றும் துணை முதல்வர் அனுமதிக்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம். அதை மீறி, சசிகலாவை கட்சியில் இணைத்தால், மீண்டும் கட்சி பிளவுபட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-செப்-201906:06:49 IST Report Abuse
skv srinivasankrishnaveni மீண்டும் சசியா அதிமுகலியா கன்றாவியா இருக்கே அவளுக்கும் அதிமுகவுக்கும் என்னடா சம்பந்தம் வெட்கமாயில்லையா ஜெயாவை அழிச்சுஒளிச்சுக்கட்டினா இந்த கொள்ளைக்காரி என்ன சொத்து இருந்தது முன்னாடி ஐயாவாள் சேர்த்தவைகள் எவ்ளோ என்று தெரிஞ்சும் சேர்க்க அலையுறீங்களா நாசமாபோவீங்கய்யா திமுக காரன் குர்சிக்கு தவம் இருக்கான் ஆளும் திறன் ஜீரோவேதான் ஆனால் அந்தாளு சுடாலினுக்கு சி எம் குர்ஸிலே குந்திடனும் என்றுவெறி மஃமுத்திப்போயாச்சு . இப்போதுஅதிமுக லே சசிவந்தால் அவ்ளோதான் கூவும்போல ஆயிரும் சசிகூடவே அவ உறவினர்கூட்டம் வந்துரும் EPS ஆப்ஸ் எல்லாம் பதிபிக்ஷம்தேஹீ என்று சசிகிட்டகையேந்துவானுக எல்லோரும் பலகோடிகளுக்கே அதிபதி ஆப்ஸ் தன புத்திரனை எம்பி ஆக்கிட்டாகா EPS க்கு பிள்ளை இருக்கான்னு தெரியலீங்கோ
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
23-செப்-201915:56:45 IST Report Abuse
ரத்தினம் அதிமுக கொஞ்ச நாளா நல்ல இருந்துச்சு. சசிகலா சேந்தாச்சுன்னா, நிச்சயம் ஆட்சி கவிழும். திரும்ப திருட்டு கழகம் ஆட்சி தான்.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
25-செப்-201906:09:42 IST Report Abuse
Anandanபிஜேபிக்கு சொம்படிச்சா அந்த கட்சி நல்லா இருக்குதுனு அர்த்தமா? நல்லா இருக்கே இந்த அடிமைத்தனம்....
Rate this:
Share this comment
??????? - Thiruvaiyaru,இந்தியா
27-செப்-201917:23:53 IST Report Abuse
???????பேனர் வச்சி கொன்னாலும் நல்ல கட்சி தானே...
Rate this:
Share this comment
Cancel
Pandianpillai Pandi - chennai,இந்தியா
23-செப்-201915:47:13 IST Report Abuse
Pandianpillai Pandi முழு பூசணிக்காவை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள் . தமிழக முன்னாள் முதல்வருக்கு நடந்தவைகள் வெளிச்சத்திற்கு வராது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X