அரசியல் செய்தி

தமிழ்நாடு

எச்.ராஜாவுக்கு போட்டியாக வானதி பயிலரங்கம்

Added : செப் 21, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
எச்.ராஜாவுக்கு போட்டியாக வானதி பயிலரங்கம்

சென்னையில், எச்.ராஜா ஆதரவாளர்கள் இன்று நடத்தும், சமூக வலைதள மாநாடுக்கு போட்டியாக, வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் சார்பில், சமூக வலைதள பயிலரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு போட்டி நிகழ்ச்சிகளை தவிர்க்கும் வகையில், டில்லி மேலிட உத்தரவை தொடர்ந்து, 'தேச ஒற்றுமை பிரசாரம் - மக்கள் சந்திப்பு கூட்டம்' என, பா.ஜ., தேசிய பொதுச்செயலர், ராம் மாதவ் தலைமையில், திருவான்மியூரில் நடைபெறுகிறது. காலியாக உள்ள, தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கு, யாரை நியமிக்கலாம் என்பதை, பொறுமையாக முடிவு செய்யலாம் என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது. பிரதமர் மோடியின், தமிழக வருகைக்கு பின், புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு, கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், தேசிய செயலர், எச்.ராஜாவை, தமிழக, பா.ஜ., தலைவராக நியமிக்க வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள், சென்னையில் இன்று, 'மோடி ஆர்மி' என்ற பெயரில், சமூக வலைதள மாநாடு நடத்துவதாக, ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதற்கு போட்டியாக, மாநில பொதுச்செயலர், வானதி சீனிவாசன் பங்கேற்கும், 'சமூக வலைதள துாதர்கள்' என்ற பெயரில், சென்னையில் பயிலரங்கம் நடத்த, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில், ஆக்கப்பூர்வமான தகவல்களை பகிர்வது, போலி பிரசாரங்கள் மற்றும் செய்திகளை கண்டறிந்து, பதில் அளிக்க வேண்டும். நல்ல செயல்களையும், நல்ல மனிதர்களையும் அடையாளப்படுத்த வேண்டும் என்பது தான், இந்த பயிலரங்கத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், எச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆதரவாளர்களின் போட்டி மாநாடுகள் விவகாரம், டில்லி மேலிடத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இரண்டையும் தவிர்க்கும்வகையில், அன்றைய தினம், 'ஒரே நாடு - ஒரே சட்டம்; தேச ஒற்றுமை பிரசாரம்; மக்கள் சந்திப்பு கூட்டம்' நடத்த வேண்டும் என, தமிழக, பா.ஜ., நிர்வாகிகளுக்கு, டில்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, திருவான்மியூரில் உள்ள, ராமச்சந்திரன் கன்வென்சன் சென்டரில், இன்று மாலை, 4:00 மணிக்கு துவங்கும், மக்கள் சந்திப்பு கூட்டத்தில், பா.ஜ., தேசிய பொதுச்செயலர், ராம்மாதவ் பங்கேற்று பேசுகிறார்.இந்த மாநாட்டில், தமிழக, பா.ஜ., தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். எனவே, தன் ஆதரவாளர்கள் நடத்தும் மாநாட்டில், எச்.ராஜா பங்கேற்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்ற, கேள்வி எழுந்துள்ளது.அதேபோல், வானதி சீனிவாசனும், தன் ஆதரவாளர்கள் நடத்தும் பயிலரங்கத்தை ரத்து செய்வாரா அல்லது ஒத்தி வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Doha,கத்தார்
24-செப்-201918:07:29 IST Report Abuse
Tamilan பிஜேபி தலைமைக்கு பணிவான வேண்டுகோள், தயவு செய்து எங்க தல singlaa, வரும் சிங்கம், அட்ட கத்தி போர்வாள், சிலை திருட்டு மன்னன், மதக்கலவர மன்னன் H.RAJA, அவர்களை தமிழக பிஜேபி தலைவராக நியமிக்கும் படி பணிவாக வேண்டிக்கொள்கிறோம். அப்பத்தான் தமிழக மக்களுக்கும் பிஜேபி யை தமிழகத்தை விட்டு துடைத்து ஏறிய லகுவாக இருக்கும். அப்போ உங்களுக்கும் H.RAJA, வை அகண்ட பாரதத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கு கவர்னராக நியமிக்க வசதியாக இருக்கும்
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
22-செப்-201908:20:07 IST Report Abuse
ரத்தினம் ராஜா என் பீஹார் சொல்லணும்? அப்ப இங்க இருக்கிற போலி டுமீல் அரசியல் வாதிகள் பாதிப்பேரை ஆந்திராவுக்கு அனுப்பணும். ஏன்னா அது தான் அவங்க தாய் மொழி, அவங்க பூர்வீகம். நமது தமிழர் பண்பாட்டை கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் ராஜா இங்குள்ள கழிசடை அரசியல் வாதிகளை விட 1000 மடங்கு மேலானவர்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
22-செப்-201907:20:18 IST Report Abuse
blocked user இந்துக்களுக்கு ஆதரவு, எளிமையான நேரான பேச்சு போன்ற நடவடிக்கைகளால் H ராஜாவை பலருக்கு பிடிக்காது.
Rate this:
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
23-செப்-201911:22:16 IST Report Abuse
D. Selestine Arputharajஹிந்துக்களுக்கு மட்டும்தான் ஆதரவு ....அதுனாலதான் பிடிக்கலை ..........
Rate this:
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
23-செப்-201911:37:43 IST Report Abuse
D. Selestine Arputharajஹிந்துக்களுக்கு மட்டும்தான் ஆதரவு .......அதுனாலதான் மத்தவங்களுக்கு பிடிக்கலை.......
Rate this:
23-செப்-201919:01:53 IST Report Abuse
என் மேல கை வெச்சா காலிஅற்புதராஜ் சில கிறிஸ்துவர்களை எங்களுக்கும் பிடிக்காது. லாரன்ஸ், எஸ்ரா, டேனியல் காந்தி, செபாஸ்டியன் சீமான். etc...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X