மூன்று மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு? ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., அதிரடி வியூகம்| Dinamalar

மூன்று மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு? ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., அதிரடி வியூகம்

Updated : செப் 23, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (14)
Share
மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளும் கட்சியான, பா.ஜ., அதிரடி வியூகங்களுடன் களம் இறங்கியுள்ளது. மூன்று மாநிலங்களிலும், பிரதமர் மோடி, ஏற்கனவே பிரசாரத்தை துவக்கியுள்ளதால், பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், விரைவில்
சட்டசபை, தேர்தல், வெற்றி, ஆட்சி, பா.ஜ., வியூகம், மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட்

மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளும் கட்சியான, பா.ஜ., அதிரடி வியூகங்களுடன் களம் இறங்கியுள்ளது. மூன்று மாநிலங்களிலும், பிரதமர் மோடி, ஏற்கனவே பிரசாரத்தை துவக்கியுள்ளதால், பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலுமே, தற்போது, பா.ஜ., ஆட்சி தான் நடக்கிறது. எனவே, இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்க, பா.ஜ., தலைவர்கள், புது வியூகங்களுடன் களம் இறங்கியுள்ளனர்.
அதே நேரத்தில், தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு, இந்த தேர்தல், வாழ்வா, சாவா பிரச்னை. எனவே, இந்த தேர்தலில் வெற்றி பெற, எதிர்க்கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.


மஹாராஷ்டிராஇந்த மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.கடந்த தேர்தலில், இந்த இரண்டு கட்சிகளும் தனித் தனியாக களம் இறங்கின. தேர்தல் முடிந்ததும், கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. இந்த தேர்தலிலும், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.

ஆனாலும், பா.ஜ.,வுடன் கூட்டணி சேருவதை தவிர, வேறு வழியில்லை என்ற நிலை, சிவசேனாவுக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 288 தொகுதிகளில், சிவசேனாவுக்கு, 100 தொகுதிகளை கொடுத்து விட்டு, மற்ற தொகுதிகளில், தானே களமிறங்க, பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.எதிர்முகாமில், காங்கிரசும், தேசியவாத காங்கிரசும், இந்த முறையும் கூட்டணி அமைத்தே போட்டியிட முடிவு செய்துள்ளன.

தனித்தனியாக போட்டியிட்டால், படு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், அந்த ஆபத்தை விலை கொடுத்து வாங்க, இரு கட்சிகளும் தயாரில்லை. இரு கட்சிகளும், தலா, 125 தொகுதி களில் போட்டியிட்டு, மற்ற தொகுதிகளை, பிற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டு உள்ளன. இங்கு, தேர்தல் களம், பா.ஜ.,வுக்கு சாதகமாகவே உள்ளதால், அந்த கட்சி தலைவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.


ஹரியானாஇந்த மாநிலத்தில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.கடந்த ஐந்தாண்டுகளில், பா.ஜ., ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளதால்இந்த முறையும் வெற்றி கிடைக்கும் என்றநம்பிக்கையுடன் களம்இறங்கியுள்ளது.

சுகாதார பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, சிறு, குறு வர்த்தக நிறுவனங்களுக்கான காப்பீடு போன்ற திட்டங்கள், பா.ஜ.,வுக்கு மிகவும் கை கொடுக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியான,காங்கிரஸ் தரப்பில்,பெரிய மகிழ்ச்சி எதுவும் காணப்படவில்லை.முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாமீது, பல வழக்குகள்நிலுவையில் இருப்பதால், அவர், தேர்தல் பணிகளில் உற்சாகம் காட்டவில்லை என, அந்தகட்சியினரே கவலையுடன் கூறுகின்றனர்.இந்த சூழலை பயன்படுத்தி, மொத்தம் உள்ள, 90 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில், பா.ஜ., தலைவர்கள் உள்ளனர்.


ஜார்க்கண்ட்இந்த மாநிலத்தில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 82 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பா.ஜ., ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும், பெரிய அளவில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவில்லைஎன்ற அதிருப்தி, மக்களிடையே நிலவுகிறது.

முதல்வர் ரகுபர் தாஸ், உயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், இங்கு, பெரும்பான்மையாகவசிக்கும் பழங்குடியினர் சமூகத்தினரை கவர, மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டாவை, பிரசாரத்தில் களம் இறக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, பழங்குடியினரின் ஓட்டுகளை மொத்தமாக வளைக்க, அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்த மூன்று மாநிலங்களிலுமே, பா.ஜ., ஆட்சி நடப்பது, அந்த கட்சிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது, மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய திட்டங்கள் ஆகியவையும், அந்த கட்சிக்கு பெரும் பலம் சேர்க்கும்.


தொடர் பிரசாரம்இந்த மூன்று மாநிலங்களிலுமே, பிரதமர் மோடி, முதல் கட்ட பிசாரத்தை முடித்து விட்டார். அடுத்த சில நாட்களிலும், பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள்பலரும், தொடர் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளனர்.அதனால், இந்த மூன்று மாநிலங்களிலும், பா.ஜ., விடமிருந்து வெற்றியை தட்டிப் பறிப்பது, எதிர்க்கட்சிகளுக்கு, அவ்வளவுஎளிதாக இருக்காதுஎன்கின்றன, அரசியல்வட்டாரங்கள்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X