பொது செய்தி

இந்தியா

துர்கா பூஜை சிறப்பு நடனம்: பெண் எம்.பி.,க்கள் அசத்தல்

Added : செப் 21, 2019
Share
Advertisement
துர்கா பூஜை சிறப்பு நடனம்: பெண் எம்.பி.,க்கள் அசத்தல்

கோல்கட்டா, :துர்கா பூஜை விழாவையொட்டி, திரிணமுல் காங்கிரஸ் பெண், எம்.பி.,க்களும், பிரபல நடிகையருமான, நுஷ்ரத் ஜகான், மிமி சக்ரவர்த்தி ஆகியோர் நடனம் ஆடிய, 'வீடியோ' பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. கோலாகலம்சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், திரிணமுல் சார்பில் போட்டியிட்ட, பெங்காலி மொழி நடிகையரான, நுஷ்ரத் ஜகான், 29, மிமி சக்ரவர்த்தி, 30, ஆகியோர், முறையே, பஷிரத், ஜாதவ்பூர் தொகுதியில் வெற்றி பெற்றனர். மேற்கு வங்கத்தில், துர்கா பூஜை பண்டிகை, ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். இதையொட்டி, மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.இந்தாண்டு, அடுத்த மாத துவக்கத்தில், இந்த பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. 'வீடியோ'இந்நிலையில், துர்கா பூஜை பண்டிகைக்காக, திரிணமுல் காங்., சார்பில், ஒரு 'வீடியோ' வெளியிடப்பட்டுள்ளது. அதில், திரிணமுல், எம்.பி.,க்களான, நுஷ்ரத்தும், மிமி சக்ரவர்த்தியும், துர்கையை போற்றி நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை, 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர், இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். நுஷ்ரத் மற்றும் மிமியின் நடனம், தங்களை மிகவும் கவர்ந்து விட்டதாக, பலர், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X