தூள் கிளப்பும் ஜெய்சங்கர்!

Added : செப் 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
தூள் கிளப்பும்  ஜெய்சங்கர்!

துாள் கிளப்பும் ஜெய்சங்கர்!

ஒரு துறைக்கு செயலராக பணியாற்றி, அதே துறைக்கு அமைச்சராவது யாருமே யோசிக்க முடியாத விஷயம். அப்படி அமைச்சர் ஆனவர்,நம்ம ஊர் ஜெய்சங்கர். வெளியுறவுத்துறை செயலராக இருந்தவர், அதே துறைக்கு அமைச்சராகி விட்டார்.இவர், பா.ஜ., சார்பில், குஜராத்திலிருந்து ராஜ்ய சபா, எம்.பி.,யானார். பல நாடுகளில், இந்திய துாதராக பணியாற்றிய ஜெய்சங்கர், பா.ஜ.,வில் இணைந்து விட்டாலும், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருப்பார் என, கட்சிக்காரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நான்கே மாதங்களில் அவர், தேர்ந்த அரசியல்வாதி ஆகிவிட்டார்; கட்சியின் கொள்கைகளையும் கரைத்து குடித்து விட்டார். இப்படி குறைந்த காலகட்டத்தில், ஜெய்சங்கர், கட்சியின் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு விட்டார் என, சீனியர் தலைவர்கள் பெருமைப்படுகின்றனர். அடிக்கடி குஜராத் செல்லும் ஜெய்சங்கர், அங்கு, கட்சியினருக்கு வேண்டிய உதவிகளை செய்கிறார். சமீபத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெய்சங்கர், 'பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்தியாவின் அங்கம்; ஒரு நாள், அதை மீட்டே தீருவோம்' எனக் கூறினார்.வெளியுறவுத்துறை அதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள், அரசியலுக்கு வந்தாலும், பட்டும் படாமலும், புரிந்தும் புரியாமலும் தான் பேசுவர். ஆனால், முன்னாள் வெளியுறவுத்துறை செயலரான ஜெய்சங்கர், 'வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டாக' பேசியது, பா.ஜ.,வில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'எங்கள் கட்சிக்காரர்களே இப்படி பேச தயங்குவர்; ஆனால், ஜெய்சங்கர், அவர்களை துாக்கி சாப்பிட்டு விட்டார்' என்கின்றனர் பா.ஜ.,வினர்.

பிரதமர் அலுவலகத்தில் யார் கை ஓங்கியுள்ளது?

பிரதமர் அலுவலகத்தில், இரண்டு அதிகாரிகள், 'பவர்புல்' ஆக இருந்தனர். ஒருவர், நிருபேந்திர மிஸ்ரா; இன்னொருவர், பி.கே.மிஸ்ரா. இவர்கள், பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியிலும் அதிகாரிகளாக இருந்தனர். மோடி, மீண்டும் பிரதமர் ஆன பிறகு, நிருபேந்திர மிஸ்ரா நீடிப்பது கடினம் என, பேசப்பட்டது. சி.பி.ஐ., மூத்த அதிகாரிகளுக்குள் பிரச்னை; அந்த விவகாரம், உச்ச நீதிமன்றம் வரை போனது. ரிசர்வ் வங்கி விவகாரம் போன்ற விஷயங்களை, நிருபேந்திர மிஸ்ரா சரியாக கையாளவில்லை என, இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அவர், இந்த ஆட்சியிலும் பதவியில் நீடித்ததோடு, அவருக்கு கேபினட் அந்தஸ்தும் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் நான்கே மாதங்களில், நிருபேந்திர மிஸ்ரா பதவி விலகினார். சொந்த காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாக சொல்லப்பட்டாலும், 'நீங்கள் போய் வாருங்கள்' என, பாசமாக சொல்லப்பட்டதாம்.இப்போது, பிரதமர் அலுவலகத்தில், பவர்புல் ஆக இருப்பவர், பி.கே.மிஸ்ரா. முதன்மை செயலரான இவருக்கு, அமைச்சர் அந்தஸ்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவர் மீது, மோடிக்கு அதீத நம்பிக்கை உண்டு. மிஸ்ரா, 1977 பேட்ச், குஜராத் கேடர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மோடி, முதன் முறையாக, குஜராத் முதல்வரான போது, அவருக்கு அரசு சம்பந்தமான பல விஷயங்களை எடுத்துச் சொன்னவர் மிஸ்ரா தான். அதனால் தான், அவர் மீது, மோடிக்கு அவ்வளவு நம்பிக்கை. மிஸ்ராவைப் போலவே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீதும், பிரதமர் மோடி அதிக நம்பிக்கை வைத்துள்ளார். தோவலுக்கும் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-செப்-201905:31:07 IST Report Abuse
 nicolethomson இதனை இவனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் , இதனை உண்மையான திராவிட தமிழிழர் திருவள்ளுவர் சொல்லியிருந்தார் அதனை மோடி ஐயா நடைமுறைப்படுத்துகிறார் , வாங்க பாலைவன மக்களே டிஸ்லைக் போட்டுட்டு போங்க
Rate this:
Share this comment
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
24-செப்-201911:08:46 IST Report Abuse
Natarajan Ramasamyதிருவள்ளுவர் சொன்னதில் கடைசி வார்த்தை மித மித முக்கியமானது 'விடல்" . அவன்காண் விடல் அவனிடம் விட்டுவிடவேண்டும். அவன் தன இச்சையாக செயல் பட சுதந்திரம் தரவேண்டும். மோடி,அதை செய்கிறார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X