காங். கட்சிக்கு புதிய தலைமை அலுவலகம் தயார்

Updated : செப் 21, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (16)
Advertisement
காங். கட்சிக்கு புதிய தலைமை அலுவலகம் தயார்

புதுடில்லி: காங். கட்சியின் புதிய தலைமை அலுவலகம் மத்திய டில்லியில் உள்ள கோட்லா சாலைக்கு விரைவில் இடமாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக காங். வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 1978-ம் ஆண்டு முதல் டில்லியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான 24, அக்பர் ரோட்டில் காங். தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கட்சிஅலுவலகம் மட்டுமல்லாது , சேவாதள கட்டடம், இளைஞர் காங். அலுவலகம் உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு டில்லி பெரு நகர அபிவிருத்தி துறை சார்பில் கட்டடத்தை காலி செய்யும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.




இந்நிலையில் காங். கட்சிக்கு புதிய தலைமை அலுவலகம் மத்திய டில்லியில் 9, கோட்லா சாலை, தீன்தயாள் உபாத்யா மார்க் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக கட்டடப்பணிகள் துரிதமாக நடந்து வந்தன.
'இந்திரா பவன்' என, பெயரில் ஆறுமாடிகளுடன் கட்டப்பட்டுள்ள உள்ள இந்த கட்டடத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து, தற்போது, வெளிப்புற பூச்சு வேலைகளும், உள் அலங்கார பணிகள் நிறைவடைந்துள்ளன. கட்சி நிறுவன தினமான டிச.28-ம் தேதி காங். தலைவர் சோனியா புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் கட்சியின் தலைமை அலுவலகம் இந்த கட்டடத்தில் இயங்கி வரும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-செப்-201915:35:27 IST Report Abuse
Endrum Indian புதிய தலைமை அலுவலகம் தயார், அப்போ தலைவர் மட்டும் தான் மிஸ்ஸிங்.
Rate this:
Share this comment
Cancel
Viswam - Mumbai,இந்தியா
22-செப்-201911:41:52 IST Report Abuse
Viswam ராபர்ட் வாத்ரா வாங்கின இடமோ ? களவாணி பசங்க பேமிலி பேர வைக்காம உடமாட்டானுங்க
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-செப்-201908:44:47 IST Report Abuse
Janarthanan வாஸ்து பிரகாரம் அம்மா, பையன்,பொண்ணு,மருமகன் ஆளுக்கு ஒரு மூலையை பார்த்த மாதிரி குந்த வைக்கவும், அப்பொழுதாவது கட்சி உருப்படுகிறதா என்று பார்ப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X