பணக்காரர்களுக்கான அரசு!

Added : செப் 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 பணக்காரர்களுக்கான அரசு!

பணக்காரர்களுக்கான அரசு!

சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீது, 33 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது. ஆனால், மிகப் பெரிய நிறுவனங்களுக்கான, 'கார்ப்பரேட்' வரி, 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்தே, சாமான்ய மக்களுக்கு அல்லாமல், பணக்காரர்கள் நலனே, பா.ஜ., அரசுக்கு முக்கியம் என்பது தெளிவாகிறது.ரன்தீப் சிங் சுர்ஜேவாலாசெய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்
வெற்றி வாய்ப்பில்லை!
இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி மீது, மக்கள் மிகுந்த கோபத்தில் இருந்தனர். ஆனால், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பதில் தாக்குதல்களே, அவர்கள் வெற்றிக்கு உதவியது. மஹாராஷ்டிராவிலும், புல்வாமா போன்ற சம்பவம் நடக்காவிட்டால், பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை.சரத் பவார்தலைவர், தேசியவாத காங்கிரஸ்

கூட்டணி தொடரும்!
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நடக்க உள்ள தேர்தலில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி தொடரும் என்று நம்புகிறேன். தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம்; இன்னும் முடிவாகவில்லை. சட்டசபை தேர்தலில் எங்களுடைய கூட்டணி வென்று, மீண்டும் ஆட்சி அமைக்கும். நான், மீண்டும் முதல்வராவேன்.தேவேந்திர பட்னவிஸ்மஹாராஷ்டிர முதல்வர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
22-செப்-201908:16:29 IST Report Abuse
RajanRajan மத்திய அரசு சம்பளதாரர்களுக்கான வரிவிதிப்பை குறைக்க வேண்டும். இதன் மூலம் நடுத்தர வரகத்தினரின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இத்தனை காலமாக சம்பள தாரர்களையே குறிவைத்து அரசியல் பண்ணிய ப சி காங்கிரஸ் இதற்காக ஆட்சி அமைக்க வர வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
22-செப்-201907:28:20 IST Report Abuse
uthappa அதிக மக்கள் வசதி படைத்தவர்களாக வேண்டும்.ஏழைகள் இருந்தால்தான் ஆட்சிக்கு வர முடியும் என்று நினைக்கும் கட்சிகள் தொலைய வேண்டும். படிப்பறிவும், கலாச்சாரமும் வளர்ந்தால் தாங்க வசதிகள் பெருகும். ஏழைகள் இல்லா நாட்டை உருவாக்குவோம்.எத்தனை காலம்தான் பெரும்பாலனவர்களை ஏழைகளாக வைத்து இருப்பது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X