பொது செய்தி

இந்தியா

ககன்யானுக்கு தயாராகிறோம்: சிவன் நம்பிக்கை

Updated : செப் 22, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (8+ 43)
Advertisement
ககன்யான், இஸ்ரோ, சந்திரயான் - 2, விக்ரம் லேண்டர், சிவன் ,நம்பிக்கை

பெங்களூரு: ''லேண்டர் சாதனத்துடனான தொடர்பு கிடைக்கவில்லை. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும், ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறோம்,'' என, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர், சிவன் தெரிவித்தார்.

தட்பவெப்ப சூழ்நிலைநிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக, 'சந்திரயான் - 2' திட்டத்தை, இஸ்ரோ செயல்படுத்தியது. விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள, 'லேண்டர்' எனப்படும், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு முன், பெங்களூரில் உள்ள, இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது.
இம்மாதம், 7ம் தேதி நிலவில் தரையிறங்கவிருந்த, லேண்டர் சாதனம், அங்கு, ஒரு நிலவு நாள், அதாவது, பூமியை பொருத்தவரை, 14 நாட்கள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதனால், அதனுடனான தொடர்பை மீட்பதற்கான முயற்சியில், இஸ்ரோ ஈடுபட்டிருந்தது. இந்த, 14 நாட்கள் அவகாசம் நேற்றுடன் முடிந்தது. நேற்று காலையில், நிலவின் தென் பகுதியில், இருள் சூழத் துவங்கியது. அங்கு, இருள் சூழும் காலத்தில், மைனஸ், 200 டிகிரி செல்ஷியஸ் வரை கடும் குளிர் இருக்கும். அந்த தட்பவெப்ப சூழ்நிலையில், லேண்டர் சாதனம் உறைந்துவிடும்.


முயற்சி



இது குறித்து, இஸ்ரோ தலைவர், சிவன் நேற்று கூறியதாவது:சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட, 'ஆர்பிட்டர்' எனப்படும், நிலவை சுற்றி வந்து ஆராய்ச்சி செய்யும் சாதனம், சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் இடம்பெற்றுள்ள, எட்டு ஆய்வு கருவிகளும், திட்டமிட்டபடி செயல்படுகின்றன.சந்திரயான் - 2 திட்டத்தின் நோக்கம், 98 சதவீதம் வெற்றி பெற்று உள்ளது.

இத்திட்டம், இரண்டு பிரிவுகளாக உள்ளது. ஒன்று, அறிவியல் செயல்திட்டம்; மற்றொன்று, தொழில்நுட்ப செயல்திட்டம். தொழில்நுட்ப செயல்திட்டத்தை பொறுத்தவரை, நாம், 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம். லேண்டர் சாதனத்துடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. லேண்டர் சாதனத்துக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்; அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.அடுத்ததாக, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். தற்போது, அந்த திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து, உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8+ 43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
22-செப்-201922:42:24 IST Report Abuse
Amirthalingam Sinniah பிள்ளையாருக்கும்,மயில் சாமிக்கும் நடந்த உலகம் சுற்றும் போட்டியில், மயில் சாமிதான் வென்றார். சந்திராயன் I க்கும் மயில்சாமிக்கும் எவ்வளவு தொடர்பிருந்ததை இந்த சிவன் மறந்ததேனோ? எல்லோரையும் அழைத்த நீங்கள் ஏன் மயில்சாமியை அழைக்கவில்லை.? அனுபவம் இல்லையாதலால், வந்தது தோல்வி.
Rate this:
Share this comment
Cancel
Jaykumar Dharmarajan - Madurai,இந்தியா
22-செப்-201915:40:14 IST Report Abuse
Jaykumar Dharmarajan முழுக்க முழுக்க நம் இந்தியாவிலேயே வடியமைக்கப்பட்டு, புவி ஈர்ப்பு சக்தியை மீறி வின் வெளியில் வெற்றிகரமாக சந்திரன் வரை செல்ல கூடிய ராக்கெட்டுகளை தயார் செய்து அதையும் சந்திரனை சுற்றி வரும்படி செய்த நம் பொறியாளர்களின் திறமை பாராட்டுக்குரியது. ஏற்கனவே சந்திராயன் ஒன்றும் நம்மால் வெற்றிகரமாக அனுப்பப் பட்டுள்ளது. சந்திராயன் இரண்டும் மற்ற நாடுகள் முயற்சி செய்யாத ஒன்றே. அதாவது சந்திரனின் துருவப் பகுதிக்கு போக முயற்சி செய்தது. என்னதான் இருந்தாலும் ஆயிரம் கோடி செலவு செய்து பலரின் முயற்சியும் பலனில்லாமல் போனது மிக வருத்தத்திற்குரியதே. இதே போல் கான்யான் ப்ரொஜெக்ட்டும் ஏற்கனவே ஒரு முறை முயற்சி செய்யப் பட்ட ஒன்றுதான்.நாட்டு மக்களின் பல சர்ச்சைகளுக்கு இடையே இந்த அறிவிப்பு இப்போது தேவையற்றது. ஏற்கனவே பல நாடுகள் பல முறை மனிதர்களை நிலவிற்கு அனுப்பி திருமப் பெற்றுள்ளது. சிறிது கால அவகாசத்திற்கு பின் சந்திராயன் தோல்வியில் மேலும் சில தகவல்களை பெற முயற்சி செய்த பின் ககன்யான் பற்றி நாட்டு மக்களுக்கு அறிவித்து இருக்கலாம் என்பது என் கருத்து
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-செப்-201914:09:12 IST Report Abuse
Pugazh V "ககன்யானுக்கு தயாராகிறோம்"- உங்கள் பணமா என்ன... வரி செலுத்தும் பாவப்பட்ட மக்களின் பணம் தானே, ககன்யான், புகன்யான், என்று பணத்தை வாரி இறையுங்கள்.
Rate this:
Share this comment
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
22-செப்-201919:03:05 IST Report Abuse
சொல்லின் செல்வன் அனைத்திலும் குற்றம் காணும் தங்களை போன்றவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X