'பஸ் ஓட்டும்போது 'ஹெல்மெட்' ஏன் போடல': ரூ.500 அபராதம் விதித்த போக்குவரத்து துறை

Added : செப் 21, 2019
Advertisement


நொய்டா, : உத்தர பிரதேசத்தில், பஸ் ஓட்டும் போது, ஓட்டுனர், 'ஹெல்மெட்' அணியவில்லை என்பதால், தனியார் பஸ் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள நொய்டாவைச் சேர்ந்தவர், நிரன்கர் சிங். இவர், சொந்தமாக பஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம், 40 பஸ்கள் உள்ளன.

அவை, பள்ளி, கல்லுாரி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, வாடகைக்கு விடப்படுகின்றன.'ஆன்லைன்'நிரன்கர் சிங்கிடம் வேலை செய்யும் பஸ் ஓட்டுனர் ஒருவர், பணியின் போது, ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக, 500 ரூபாய் அபராதம் விதிப்பதாக, நிரன்கர் சிங்குக்கு, போக்குவரத்து துறையில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக, தகவல் அனுப்பப்பட்டது.இதை கண்டு திகைத்துப்போன நிரன்கர், இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாக சவால் விட்டுள்ளார்.'பஸ் இயக்கும்போது, 'சீட் பெல்ட்' அணியவில்லை என்றால் தான் அபராதம் விதிக்கப்படும்; ஹெல்மெட் ஏன் அணிய வேண்டும்?' என, அப்பகுதியைச் சேர்ந்த பஸ் ஓட்டுனர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.இந்த குறிப்பிட்ட பஸ் ஓட்டுனர், சீட் பெல்ட் அணியாததற்காக, ஏற்கனவே, நான்கு முறை அபராதம் செலுத்தி உள்ளார். 'இது தவறுதலாக நிகழ்ந்ததா என விசாரித்து வருகிறோம். தவறு இருந்தால், அவை சரி செய்யப்படும்' என, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிர்ச்சிஇதற்கிடையே, சண்டிகரைச் சேர்ந்த, சஞ்சீவ், 21, என்ற இளைஞருக்கு, சாலை விதி மீறலுக்காக, சமீபத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. அதை செலுத்துவதற்காக, அவர் நீதிமன்றம் சென்றார். அப்போது, சஞ்சீவ் மீது, 2017 முதல், 2019 வரையில், 189 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.இதை கேள்விப்பட்டதும், அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அனைத்து வழக்குகளும், 'இ - சலான்' எனப்படும், மின்னணு முறையில் விதிக்கப்படும் அபராதங்களாகும்.சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்யும், போக்குவரத்து விதி மீறலின் அடிப்படையில், இவை வீட்டுக்கு அனுப்பப்படுகின்றன. சம்பந்தப்பட்டவர் வீடு மாறிவிட்டால், அது குறித்து, அவருக்கு தகவல் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த, 'இ - சலான்' அபராதங்களுக்கு, 'மொபைல் போன்' மூலம் தகவல் அனுப்ப, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X