அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெற்றி பெறுவோரின் பதவிக்காலம் வெறும் 19 மாதம்!

Updated : செப் 22, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement

தமிழகத்தில், காலியாக உள்ள, நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள, ஒரு சட்டசபை தொகுதிக்கும், அடுத்த மாதம், 21ம் தேதி, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மூன்று தொகுதிகளிலும், நாளை வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. அக்., 24ல், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோரின் பதவிக்காலம், வெறும், 19 மாதங்கள் மட்டுமே. விரைவில் நடக்கவுள்ள, உள்ளாட்சி தேர்தலுக்கான, முன்னோடி ஆட்டமாக, இது பார்க்கப்படுகிறது.



latest tamil news


இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில், தேர்தல் பணியை தொடங்கிவிட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும் போட்டியிடுவதாக தெரிவித்தார். வரும் 23ம் தேதி விருப்ப மனு பெறப்படும் என்றார் ஸ்டாலின்.



திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டசபை தொகுதி, காங்., - எம்.எல்.ஏ., வசந்தகுமார், லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்றதும், தன், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அதனால், நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப் பட்டது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., ராதாமணி, உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இதனால், இந்தத் தொகுதியும் காலியானது. புதுச்சேரி மாநிலம், காமராஜ் நகர், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வைத்தியலிங்கம், எம்.பி.,யானதால், தன், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்; அந்தத் தொகுதியும் காலியானது.


latest tamil news





பரிசீலனை



இம்மூன்று தொகுதிகள் உட்பட, நாடு முழுவதும் காலியாக உள்ள, 64 சட்டசபை தொகுதிகளுக் கும், நேற்று இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, அடுத்த மாதம், 21ல், இடைத் தேர்தல் நடக்க உள்ள தொகுதிகளில், நாளை வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. மனு தாக்கல் செய்ய, 30ம் தேதி கடைசி நாள். அக்., 1ல் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்; 3ம் தேதி மாலை, 3:00 மணிக்குள், மனுவை வாபஸ் பெறலாம்.


latest tamil news





வெற்றி



அதன்பின், வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு, 21ம் தேதி நடக்கும்; ஓட்டு எண்ணிக்கை, அக்., 24ம் தேதி நடக்கும். இந்த தேர்தலில் வெற்றி பெறுவோரின், பதவிக் காலம், வெறும், 19 மாதங்கள் மட்டுமே. ஏனெனில், தமிழக அரசின் பதவிக் காலம், 2021 மே மாதம் நிறைவடைகிறது. அதன்பின், சட்டசபை பொதுத்தேர்தலை, தமிழகம் சந்திக்க வேண்டும். இதற்கிடையில், வரும் நவம்பரில், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.


latest tamil news




எனவே, இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தி.மு.க., - அ.தி.மு.க.,வின், உள்ளாட்சி தேர்தலுக்கான, முன்னோடி ஆட்டமாக பார்க்கப்படுகிறது.நடத்தை விதி அமல்தேர்தல் தேதி, நேற்று அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதி அமைந்துள்ள மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இடைத்தேர்தலை சந்திக்க, தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகள் சுறுசுறுப்படைந்து உள்ளன. கட்சியினரிடம் விருப்ப மனு வாங்கி, வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகளை துவக்கி உள்ளன.


நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி



நாங்குநேரி தொகுதியில், ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்ததால், அக்கட்சியே மீண்டும் போட்டியிட விரும்பியது; தி.மு.க.,வும் களம் இறங்க ஆர்வம் காட்டியது. இதனால், இத்தொகுதியில் எந்த கட்சி போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நேற்று மதியம், தமிழக, காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள், தங்கபாலு, குமரி அனந்தன் மற்றும் நிர்வாகிகள், தி.மு.க., அலுவலகமான அறிவாலயம் சென்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, ஆலோசனை நடத்தினர்.

அதன்பின், ஸ்டாலின் கூறியதாவது:தமிழகத்தில், விக்கிரவாண்டி, நாங்குநேரி; புதுவை மாநிலம், காமராஜ் நகர் தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர், அழகிரி மற்றும் நிர்வாகிகள் கூடி விவாதித்தோம். அந்த அடிப்படையில், விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க., நிற்கும். நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும். புதுவை மாநிலம், காமராஜ் நகர் தொகுதியிலும், காங்கிரஸ் போட்டியிடும். தி.மு.க.,வில், நாளை விருப்ப மனு பெறப்படும்; 24ல் நேர்காணல் நடக்கும். விரைவில், வேட்பாளர் அறிவிக்கப்படுவார். விலைவாசி உயர்வுக்கு, தேர்தலில் விடை கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழக, காங்., தலைவர் அழகிரி கூறியதாவது:காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற, கூட்டணி கட்சி தலைவர்கள், அயராது பாடுபட தயாராக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளை விளக்கி, தமிழகத்திலும், இந்தியாவிலும், சிறந்த மாற்று அரசு உருவாக்க, காங்., கூட்டணி கடுமையாக உழைக்கும். நாளை, காங்கிரஸ் கட்சியில், விருப்ப மனு பெறப்படும். போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு தாக்கல் செய்யலாம்; அதன்பின், வேட்பாளரை முடிவு செய்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


'அ.ம.மு.க., போட்டியிடாது!'



'இடைத்தேர்தலில், அ.ம.மு.க., போட்டியிடாது' என, அக்கட்சி பொதுச்செயலர், தினகரன் தெரிவித்தார்.நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு, அக்., 21ல் இடைத்தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில், அ.ம.மு.க., போட்டியிட வில்லை. இது குறித்து, தினகரன், நிருபர்களிடம் கூறுகையில், ''கட்சியை பதிவு செய்யும் வேலை நிறைவு பெறவில்லை. கட்சிக்கு சின்னம் பெற்ற பின் தான், தேர்தலில் நிற்க முடியும். எனவே, இடைத்தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பில்லை,'' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
22-செப்-201917:41:00 IST Report Abuse
Vijay D Ratnam இரண்டு தொகுதிகளிலும் மக்கள் கொஞ்சமாவது யோசித்து வாக்களிப்பார்களேயானால் இரண்டிலும் அதிமுக வெல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. திமுகவுக்கு வாக்களிப்பதால் என்ன பயன் வரப்போகிறது. சீனி சக்கர சித்தப்பா சிலேட்ல எழுதி நக்கப்பான்னு இலக்கியம் பேசிகிட்டு வழக்கம்போல் கைப்புள்ளயின் வெளிநடப்பில் கூட இரண்டு அல்லக்கை சேந்து வெளிநடப்பு செய்வார்கள். அம்புட்டுதான். அதுவே அதிமுக வென்றால் ஆளும்கட்சி எம்எல்ஏ. அடுத்த தேர்தலில் ஜெயிப்பதற்காகவாவது எதுனாச்சுக்கும் நல்லது நடக்கும்.
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
22-செப்-201915:56:09 IST Report Abuse
PANDA PANDI இந்த தடவையாவது பாஜக தனித்து போட்டி இடவேண்டும். 50 வருட பாரம்பரிய உள்ள ஒரு கட்சி மாற்றான் தோட்டத்தில் பூக்கக்கூடாது. தனித்து நின்று தங்கள் செய்த கோவில் பணிகளை கூறி ஓட்டு வங்கி நிரூபிக்கவேண்டும். இதுதான் சரியான சந்தர்ப்பம். பாஜகவின் அகிலஇந்தியா கொள்கை இன்று நமக்கு நாளை எனக்கு..
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-செப்-201914:20:08 IST Report Abuse
Pugazh V ஓ...இதுவேற . இப்படி ஒரு சால்ஜாப் இருக்கிறதா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X