இடைத்தேர்தலால் கர்நாடகா பா.ஜ., ஆட்சிக்கு சிக்கல்: தகுதி இழந்த, எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு தொடர வியூகம்

Updated : செப் 23, 2019 | Added : செப் 21, 2019 | கருத்துகள் (9)
Advertisement
இடைத்தேர்தல், கர்நாடகா, பா.ஜ., ஆட்சி, சிக்கல், எம்.எல்.ஏ.,க்கள், வழக்கு, வியூகம்

பெங்களூரு: கர்நாடகாவில், எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அந்த தொகுதிகளில் அக்டோபர், 21ம் தேதி, இடைத்தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 15 எம்.எல்.ஏ.,க்கள் பீதியடைந்துள்ளனர். ஒரு வேளை, இடைத்தேர்தலில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுவது உறுதி. இதனால், இடைத்தேர்தலுக்கு, நீதிமன்றத்தில் தடை வாங்க, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் தயாராகி வருகின்றனர்.

கர்நாடகாவில், குமாரசாமி முதல்வராக இருந்த போது, ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மீது அதிருப்தி அடைந்து, இந்த இரு கட்சிகளையும் சேர்ந்த, 17 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர். இதனால், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்ட போது, அப்போதைய, கர்நாடக சட்டசபை சபாநாயகர், ரமேஷ்குமார், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், காங்கிரசின், 14 எம்.எல்.ஏ.,க்களையும், ம.ஜ.த.,வின், மூன்று எம்.எல்.ஏ.,க்களையும், தகுதி நீக்கம் செய்தார்.


வரிசைப்படி விசாரணைஇதனால், குமாரசாமி தலைமையிலான, ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்தது. இதற்கிடையில், தங்களின் ராஜினாமா கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தகுதி நீக்கம் செய்துள்ள சபாநாயகரின் தீர்ப்பை தடை செய்யும்படி, 17 தகுதி நீக்க, எம்.எல்.ஏ.,க்களும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.இதை, அவசர மனுவாக விசாரிக்க, எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், வரிசைப்படி தான் விசாரிக்கப்படும் என, உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

இந்நிலையில், கர்நாடகத்தில் காலியாக உள்ள, 17 தொகுதிகளில், 15 தொகுதிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம், நேற்று இடைத்தேர்தல் அறிவித்தது; ராஜராஜேஸ்வரி நகர், மஸ்கி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் படவில்லை.

இது குறித்து, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி, சஞ்சீவ்குமார், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி: தகுதி நீக்கம் செய்யப் பட்ட, 17 எம்.எல்.ஏ.,க்களும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். ஆனால், இந்த வழக்கு, இன்னும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை. இதற்கிடையே, ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் மஸ்கி தொகுதிகளில், 2018 சட்டசபை தேர்தலில் வென்றவர்கள் மீது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

இதனால், இந்த இரண்டு தொகுதிகள் தவிர்த்து, மற்ற, 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது.இந்த, 15 தொகுதிகளுக்கும், நாளை, வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது; மனு தாக்கல் செய்ய, 30ம் தேதி கடைசி நாள்; அக்டோபர், 1ம் தேதி, மனுக்கள் பரிசீலிக்கப்படும்; மனுக்கள் வாபஸ் பெற, 3ம் தேதி கடைசி நாள்; 21ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கும்; 24ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

இடைத்தேர்தல் நடக்கஉள்ள தொகுதிகள் இருக்கும் மாவட்டங்கள் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. வெள்ள பாதிப்பு பகுதிகளில், நிவாரண பணிகள் செய்யவும்,மைசூரு தசரா விழா நடத்தவும் தடைஇல்லை.ஆனால், அரசியல் கட்சி தலைவர்கள், எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது. தசரா விழாவுக்கு, கடந்த முறை, சிறப்பு அனுமதி பெற்றிருந்தனர். அது போல, மீண்டும் சிறப்பு அனுமதி பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

இடைத்தேர்தல் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளதால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் பீதி அடைந்துள்ளனர். ஒரு வேளை, இடைத்தேர்தலில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுவது உறுதி. இந்நிலையில், தகுதி நீக்க, எம்.எல்.ஏ.,க்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நாளை விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய மனு


அதே நாளில், இந்த விசாரணை முடியும் வரை, இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கும்படி, புதிய மனு தாக்கல் செய்ய, தகுதி நீக்க, எம்.எல்.ஏ.,க்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில், இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக, ம.ஜ.த., தேசிய தலைவர், தேவகவுடா அறிவித்து உள்ளார். காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர், சித்தராமையா, தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள ஹொஸ்கோட்டை தொகுதியில், காங்கிரஸ் மாநாடு நடத்தி, தன் தொண்டர்களை தேர்தலுக்கு தயாராகும்படி அழைப்பு விடுத்துஉள்ளார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஏற்கப்பட்டு, வரும் தீர்ப்பை பொறுத்தே, கர்நாடகா வில், 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்குமா என தெரிய வரும் என, சட்ட நிபுணர் ஒருவர் கூறினார்.ரகசிய ஆலோசனைஅறிவிக்கப்பட்டுள்ள இடைத் தேர்தலால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை அறிந்த முதல்வர், எடியூரப்பா, நேற்று மாலை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். அப்போது, கர்நாடக அட்வகேட் ஜெனரல், பிரபுலிங்க நாவடகியை வரவழைத்த முதல்வர், இடைத்தேர்தலுக்கு தடை கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது பற்றி, அவருடன் விவாதித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
22-செப்-201916:25:27 IST Report Abuse
Sampath Kumar ஓகே தசரா பண்டிகை ஸ்டார்ட்ட் நிச்சயம் இந்த தீபாவளி கர்நாடகாவிக்கு தலை வலிதான்
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
22-செப்-201916:08:45 IST Report Abuse
Srikanth Tamizanda.. நீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கு இருக்கும் போது எப்படி இடைத் தேர்தல் நடத்த முடியும்? இந்த காரணம் (நீதி மன்ற வழக்கு) கூறித் தானே தமிழகத்தில் இடை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் தள்ளிப் போட பட்டது? இதை தானே தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும்? கர்நாடகாவுக்கு ஏன் தேர்தல் ஆணையம் இவ்வாறு செய்ய வேண்டும்? இது ஏதோ அரசுக்கு அவப்பெயர் உருவாக்க எவனோ செய்த சதி..
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
22-செப்-201912:31:36 IST Report Abuse
Ashanmugam எடியூரப்பா கர்நாடக மாநிலத்தில் இருக்கும்வரை சிக்கல்தான்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X