எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் அதிகாரிகள் நழுவுவது ஏன்?

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
நீட் ,தேர்வில், ஆள்மாறாட்டம்,அதிகாரிகள்,நழுவுவது,ஏன்?

சென்னை, 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில், தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர், வெங்கடேசன். இவர், சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவரது மகன், உதித் சூர்யா. இரண்டு ஆண்டுகளாக, நீட் தேர்வு எழுதியும், தேர்ச்சி அடையவில்லை.தலைமறைவுஇந்த ஆண்டு, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தேர்வு எழுதினார். 385 மதிப்பெண்களுடன், தேனி அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றார்.இதற்கிடையே, மாணவர் உதித் சூர்யா முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில், கல்லுாரி நிர்வாகம், போலீசில் புகார் அளித்தது.

புகாரை தொடர்ந்து, மாணவரின் குடும்பம் தலைமறைவானது.போலீஸ் விசாரணையில், உதித் சூர்யாவிற்கு பதிலாக,வேறொரு மாணவர்,'நீட்' தேர்வு எழுதியதும், கலந்தாய்வில் பங்கேற்றதும் தெரிய வந்தது. அவரை எப்படி அதிகாரிகள் அனுமதித்தனர் என்ற, கேள்வி எழுந்துள்ளது. இந் நிலையில், இவ்விவகாரத்தில், அத்தேர்வை நடத்தும், மத்திய அரசின், தேசிய தேர்வு முகமை தான் பதில் அளிக்க வேண்டும் என கூறி, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், தப்பிக்க நினைக்கின்றனர்.


தவறியுள்ளனர்நாடு முழுவதும், இந்த ஆண்டு, நீட் தேர்வை, 14 லட்சத்து, 10 ஆயிரத்து, 755 பேர் எழுதினர். இதில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை, தேசிய தேர்வு முகமை கண்காணிக்க தவறியுள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 5,000க்கும் குறைவான, எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., இடங்களே உள்ளன. இதற்கு, 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே, கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.

கவுன்சிலிங்கின் போது, இருப்பிட சான்று, பெற்றோரின் பிறப்பு சான்றிதழ் உட்பட, பல சான்றிதழ்கள், மாணவரிடமிருந்து பெறப்பட்டன. அப்படி இருக்கையில், உதித் சூர்யா சான்றிதழ்களை, கவுன்சிலிங் போதே, ஆய்வு செய்திருந்தால், இந்த முறைகேடு தடுக்கப்பட்டு இருக்கும். மேலும், ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் தான், அந்தந்த கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனரா என்பதையும், மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கண்காணிக்க தவறியுள்ளனர்.


போலீசார் தீவிரம்இப்படி கோட்டை விட்ட, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், தற்போது, 'தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும்; எங்கள் தரப்பில், எந்த தவறும் நடக்கவில்லை' என, பேசி வருவது நியாயமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.இதற்கிடையே, முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் மற்றும் பெற்றோரின் வங்கி கணக்கு மற்றும் பல முக்கிய ஆவணங்களை, போலீசார் சேகரித்துஉள்ளனர்.இந்த மாணவனை பிடித்தால் தான், உடந்தையாக இருந்தவர்கள், தேர்வு எழுதிய மாணவர் யார் என்பது தெரிய வரும் என்பதால், போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைப்பு?
'நீட்' தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.தேனி மாவட்ட, எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில், ''இவ்வழக்கில் வெளி மாநிலம், பிற தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றினால், வழக்கை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவர். இதை, ஐ.ஜி., முடிவு செய்வார். இந்த முறைகேடு குறித்த விபரம் தெரிந்தோர், 94981 01570 என்ற எண், sbofficethenidist@gmail.com என்ற இணைய முகவரியில் புகார் செய்யலாம்'' என்றார்.


பொறுப்பு யார்?கடந்த காலங்களில், சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம், 'நீட்' தேர்வை நடத்தியது. அப்போது, அந்தந்த மாநிலத்தில் உள்ள, இயக்குனர்கள், நீட் தேர்வு விவகாரத்தில் பதிலளிக்க கூடிய அதிகாரிகளாக இருந்தனர். தற்போது, தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வை நடத்துகிறது.இதற்கான தலைமை அலுவலகம், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது. ஆனால், மாநிலங்களுக்கான அதிகாரமிக்க அதிகாரிகள் யார் என்பது, தெரியாத நிலை உள்ளது. எனவே, அந்தந்த மாநிலங்களும், பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
25-செப்-201902:28:13 IST Report Abuse
Rajesh காசு, பணம், துட்டு, மணி.. மணி..
Rate this:
Cancel
22-செப்-201911:14:34 IST Report Abuse
ஆப்பு சர்க்காரியா கமிஷன் வந்தாலும் தமிழன் விஞ்ஞான ஊழலைக் கண்டுபிடிக்க முடியலை. இதுவும் அப்படித்தான்.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-செப்-201908:34:08 IST Report Abuse
ஆரூர் ரங் உதயசூர்யா என்ற பெயரே விஞ்ஞான முறைகேடு எனக் காட்டுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X