பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளிக்கு ஜி.எஸ்.டி., விலக்கு: தேவாங்கர் மாநாட்டில் கோரிக்கை

Added : செப் 22, 2019
Advertisement
ஜவுளிக்கு ஜி.எஸ்.டி., விலக்கு: தேவாங்கர் மாநாட்டில் கோரிக்கை

கோவை, பாரம்பரிய நெசவாளர்களின் நலன் காக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அனைத்து தேவாங்கர் சமூக நல மாநாடு கோவையில் நேற்று நடந்தது.
தேவாங்க சமூக குலகுரு தயானந்தபுரி சுவாமி துவக்கி வைத்தார். சவுடேஸ்வரி அறக்கட்டளை செயலர் ஆராதனா ராஜு சுப்பிரமணியம் வரவேற்றார். மாநாட்டு தலைவர் பதஞ்சலி சுப்பிரமணியம், இணை தலைவர் கிரி கண்ணன் தலைமை வகித்தனர்.
மாநாட்டு செயலர் மதிவாணன் 'தேவாங்கர் வரலாறு' என்ற தலைப்பிலும், இணை பொதுச்செயலர் ஐஸ்வர்யா மூர்த்தி 'நெசவாளர்களின் இன்றைய நிலை' என்ற தலைப்பிலும், மேடை பொறுப்பாளர் சண்முகம் 'கைத்தறி வளர்ச்சி' என்ற தலைப்பிலும் பேசினர்.
இணை செயலர் அண்ணாதுரை தீர்மானங்களை விளக்கினார். ஜெகநாதன் நன்றி கூறினார்.
கைத்தறித்துறை அமைச்சர் மணியன் பேசுகையில், ''நெசவாளர்களுக்கு ஈடு இணையில்லை. டிராபேக் வரிச்சலுகையை உயர்த்தி தரும்படி ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கேட்டிருக்கிறோம். கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றிக் கொடுக்கும்'' என்றார்.
தயானந்தபுரி சுவாமி பேசியதாவது:
40 ஆண்டுக்கு பின் சிரமங்களை கடந்து நடக்கும் இம் மாநாட்டின் மூலம் நல்ல எழுச்சி கிடைத்துள்ளது. தமிழகத்தில் 50 லட்சம் தேவாங்கர் சமூக மக்கள் உள்ளனர். இந்த மாநாட்டில் 18 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு அரசு தீர்வு காணும் என்ற நம்பிக்கை உள்ளது. பஞ்சை நுாலாக்கி, ஆடையாக்கும் சக்தி நமக்கு மட்டுமே உண்டு. ஆனாலும் நமது சமுதாயம் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ளது. மக்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக இந்த மாநாடு அமைந்துள்ளது, என்றார்.
4000 இளைஞர்கள்
பக்தியுடன் கத்தி வீசியபடி ஊர்வலம் சென்றனர்.
அமைச்சர் வேலுமணி, பா.ஜ., மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன், கர்நாடகா, ஆந்திரா, ஒடிஸா, மகாராஷ்டிரா தேவாங்க சமூக பிரமுகர்கள் பேசினர்.
தீர்மானங்கள்
* நெசவாளர்களுக்கு
தறியுடன் கூடிய வீட்டை அரசு இலவசமாக கட்டித்தர வேண்டும். அதில் சூரிய
மின் சக்தி வசதி ஏற்
படுத்தி தர வேண்டும். தறி சார்ந்த உபகரணங்கள் இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
* நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ காப்பீடு திட்டம் 5 லட்சம் ரூபாய் வரை வழங்க வேண்டும்; 60 வயதுக்கு மேற்பட்ட நெசவாளர்களுக்கு ரூ. 5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
* தேவாங்கர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் மூலம் சமயம் மற்றும் மொழிவாரி சிறு
பான்மையினருக்கான சலுகைகள் வழங்க வேண்டும்.
* நெசவாளர்களுக்கு மூலப் பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் நெசவு செய்யப்பட்ட துணி ரகங்களை ஒரே இடத்தில் விற்பனை செய்ய ஏதுவாக அந்தந்த பகுதியில் நெசவுப்பூங்கா அமைக்க வேண்டும்.
* நாட்டின் பிற மாநிலங்களில் இருப்பதுபோல, நெசவாளர்கள் வங்கி தொடங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
* கைத்தறியில் உற்பத்தியாகும் அனைத்து ஜவுளி ரகங்களுக்கும் ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பருத்தி, பட்டு நுால் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
* நெசவு செய்யப்பட்ட பருத்தி மற்றும் பட்டுத்துணிகளை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிப்பதோடு, இறக்குமதி வரியையும் உயர்த்த வேண்டும்.
* நெசவுத்தொழிலுக்கு மூலாதாரமான நுால் சாய ஆலைகளின் சுத்திகரிப்பு கட்டமைப்பை அரசே அந்தந்த பகுதிகளில் ஏற்படுத்தித் தர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X