பொது செய்தி

தமிழ்நாடு

நினைவு சின்னமாகும் முத்தம்மாள் சத்திரம்

Added : செப் 22, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 நினைவு, சின்னம், முத்தம்மாள் சத்திரம்,இரண்டாம் சரபோஜி

தஞ்சாவூர்:இரண்டாம் சரபோஜி மன்னரால், 1800ம் ஆண்டு, தஞ்சாவூர், ஒரத்தநாட்டில் கட்டப்பட்ட முத்தம்மாள் சத்திரம், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக, விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக, தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள், 1743 முதல், 1837 வரை, தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை, பெரிய, சிறிய சத்திரங்களை அமைத்தனர்.இவற்றில், தஞ்சாவூர், சிரேயஸ் சத்திரம்; சூரக்கோட்டை, சைதாம்பாள்புரம் சத்திரம்; ஒரத்தநாடு, முத்தம்மாள் சத்திரம்; பட்டுக்கோட்டை, காசங்குளச் சத்திரம், தனுஷ்கோடியில், சேதுக்கரை சத்திரம் என, வழி நெடுகிலும், 20 சத்திரங்கள் உள்ளன.


கோரிக்கைஇதில், ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம், 1800ல், இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது என, அங்குள்ள, மராட்டிய கல்வெட்டு குறிப்பிடுகிறது.அழகிய தோரண அமைப்பு உடைய யானை, குதிரை பூட்டிய தேர் சக்கர வாயில் பகுதியும், துாண்கள் தாங்கி நிற்கும் பெரிய முற்றங்களும், ஆங்காங்கே சிவலிங்கமும், மேல்தளத்தில் அழகிய வேலைப்பாட்டுடன், மரத்தால் அமைக்கப்பட்ட துாண்களும், நீர் நிறைந்த கிணறும், பழமையோடு உள்ளது.

ஆங்கிலேயர் வருகைக்கு பின், பள்ளிக்கூடமாகவும், அதைத் தொடர்ந்து, மாணவர்கள் விடுதியாகவும் பயன் படுத்தப்பட்டது.தற்போது, சேதமடைந்த நிலையில் உள்ள, முத்தம்மாள் சத்திரத்தை பாதுகாக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழக தொல்லியல் துறையின் மண்டல உதவி இயக்குனர், தங்கதுரை தலைமையில், வரலாற்று ஆய்வாளர் குழு, முத்தம்மாள் சத்திரத்தில் ஆய்வு செய்தது.


வாய்ப்புஇது குறித்து, மண்டல உதவி இயக்குனர் தங்கதுரை கூறியதாவது:முத்தம்மாள் சத்திரம், கலைநயத்தோடு உள்ளது. முத்தம்மாள் சத்திரத்தில் உள்ள பொருட்கள் என்னென்ன, வழிபாட்டு தெய்வச் சிலைகள் உள்ளதா, கட்டடத்தின் தற்போதைய நிலை ஆகியவற்றை ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளோம்.விரைவில், இவை பாது காக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படலாம். பின், இந்த இடத்தில், அருங்காட்சியகம் அமைக்கவும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
22-செப்-201906:50:41 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy In Trichy town hall, there is Mangammal Palace and other buildings which are used by Police and Postal department and other state Government offices. Adjacent to that on the Big Bazaar street ids Mangammal Chatram. The portion facing the street are all with commercial shops. The main Chatram hall used to be let out for marriage functions in olden days. This Chatram also need to be preserved along with Mangammal palace and other connected buildings. There used to be a Mantapam in the centre of town hall which used to be used by stamp vendors in olden days. That mantapam also needs to be restored. Town hall, which once boasted holding political meetings of all famous leaders, has now become a public toilet and parking lot. There is a very good park under "fruit Merchants Trust" which used to be the lung of the town. It also has a huge tank , half the size of Teppakulam inside. It was used as garbage dup for falling leaves etc. I wonder whether even the mayor of Trichy, if any , is aware of this park and the exotic varieties of tropical flora inside.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X