பொது செய்தி

இந்தியா

மஹாராஷ்டிரா, ஹரியானாவில் அக்.21ல் சட்டசபை தேர்தல்

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019
Advertisement

புதுடில்லி : 'வரும் அக்டோபர், 21ம் தேதி, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்களோடு, நாடு முழுவதும், 18 மாநிலங்களில் உள்ள, 64 சட்டசபைதொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும், ஒரே கட்டமாக நடத்தப்படும்' என, தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.






மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டசபைகளுக்கான ஆயுட்காலம் முடிவடைய உள்ள நிலையில், ஜார்க்கண்டை தவிர்த்து, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை, தலைமை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: ஹரியானா சட்டசபைக்கான ஆயுட்காலம், நவம்பர், 2ம் தேதியுடனும்; மஹாராஷ்டிரா சட்டசபைக்கான ஆயுட்காலம், நவம்பர், 9ம் தேதியுடனும் முடிவடைகின்றன.





அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், ஹரியானாவில், 1.82 கோடி வாக்காளர்களும், மஹாராஷ்டிராவில், 8.94 கோடி வாக்காளர்களும் உள்ளனர். இம்முறை, இரு மாநில தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் கட்சிகள் அனைத்தும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த பொருட்களை மட்டுமே, பிரசாரத்திற்கு பயன்படுத்த வேண்டும்.






மஹாராஷ்டிராவில் உள்ள, 288 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் உள்ள, 90 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக தேர்தல்கள் நடைபெறவுள்ளன. நக்சல் அபாயம் இருப்பதாக கூறப்படும், மஹாராஷ்டிராவின் கச்சிரோலி, கொண்டியா ஆகிய பகுதிகளில், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.





Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X