பிரதமர் அலுவலகத்தில் ‛பவர்புல்' யார்?

Updated : செப் 23, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி : பிரதமர் அலுவலகத்தில், இரண்டு அதிகாரிகள், 'பவர்புல்' ஆக இருந்தனர். ஒருவர், நிருபேந்திர மிஸ்ரா; இன்னொருவர், பி.கே.மிஸ்ரா. இவர்கள், பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியிலும் அதிகாரிகளாக இருந்தனர். மோடி, மீண்டும் பிரதமர் ஆன பிறகு, நிருபேந்திர மிஸ்ரா நீடிப்பது கடினம் என, பேசப்பட்டது.






சி.பி.ஐ., மூத்த அதிகாரிகளுக்குள் பிரச்னை; அந்த விவகாரம், உச்சநீதிமன்றம் வரை போனது. ரிசர்வ் வங்கி விவகாரம் போன்ற விஷயங்களை, நிருபேந்திர மிஸ்ரா சரியாக கையாளவில்லை என, இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அவர், இந்த ஆட்சியிலும் பதவியில் நீடித்ததோடு, அவருக்கு கேபினட் அந்தஸ்தும் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் நான்கே மாதங்களில், நிருபேந்திர மிஸ்ரா பதவி விலகினார். சொந்த காரணங்களுக்காக அவர் பதவி விலகியதாக சொல்லப்பட்டாலும், 'நீங்கள் போய் வாருங்கள்' என, பாசமாக சொல்லப்பட்டதாம்.





இப்போது, பிரதமர் அலுவலகத்தில், பவர்புல் ஆக இருப்பவர், பி.கே.மிஸ்ரா. முதன்மை செயலரான இவருக்கு, அமைச்சர் அந்தஸ்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவர் மீது, மோடிக்கு அதீத நம்பிக்கை உண்டு. மிஸ்ரா, 1977 பேட்ச், குஜராத் கேடர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மோடி, முதன் முறையாக, குஜராத் முதல்வரான போது, அவருக்கு அரசு சம்பந்தமான பல விஷயங்களை எடுத்துச் சொன்னவர் மிஸ்ரா தான்.

அதனால் தான், அவர் மீது, மோடிக்கு அவ்வளவு நம்பிக்கை. மிஸ்ராவைப் போலவே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீதும், பிரதமர் மோடி அதிக நம்பிக்கை வைத்துள்ளார். தோவலுக்கும் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-செப்-201905:13:09 IST Report Abuse
 nicolethomson எமது இந்தியா பவர்புல் இந்தியா அதுவும் 2020 இல் என்று ஆவதால் நிச்சயம் சந்தோஷம்
Rate this:
Share this comment
Cancel
jay - toronto,கனடா
22-செப்-201921:00:14 IST Report Abuse
jay gst நல்லது என்று சொன்னவர் யார்
Rate this:
Share this comment
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
22-செப்-201918:04:39 IST Report Abuse
S.kausalya "தமிழன் தில்லியை ஆள்வான்". எப்படி 1965 இலிருந்து நம் தமிழ் நாட்டை ஆண்டு கொண்டு உள்ளார்கள் இல்லையா அது போன்றா? ஒரு துறையில் ஆவது ஊழல் இல்லாமல் உள்ளதா? இட ஒதுக்கீடு மூலம் திறமை பின்னுக்கு தள்ளப்பட்டது.. இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்தவர்களே இப்போது அரசு அலுவலகங்களில் உள்ளனர். மீதி, சில பேர் கருணை அடிப்படையில் பணி பெற்றவர்கள் தாம் . இவர்கள் வேலை செய்யாமல் ,சம்பளம் கிம்பலம் பெறுவது பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள் 23 ஆம் புலிகேசியின் சொல்வது போல் வெளியில் அரசாங்க வேலை என பீத்தி திரிகிறார்கள். இதில் டெல்லிக்கு வெறே போய். தமிழன் கெத்து காட்டனுமாம். தன் இன மக்களிடமே லஞ்சம் வாங்கி, அவர்களை இழுத்தடித்து, கஷ்டபடுத்தாமல் முதலில் இருக்க சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X