அமெரிக்க எரிசக்தி நிறுவன தலைவர்கள் கூட்டத்தில் மோடி பங்கேற்பு

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

ஹூஸ்டன்: ஹூஸ்டனில் நடந்த அமெரிக்க எரிசக்தி நிறுவன தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.latest tamil news
கர்பா நடனம்

அமெரிக்கா-இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி 7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் ஹவுஸ்டனில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 'ஹவுடி, மோடி!' நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கான கொண்டாட்டங்கள் நடந்து வரும் நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில் 6000 க்கும் மேற்பட்டவர்கள் கர்பா என்னும் நிகழ்ச்சியை நடத்தினர். இவர்களில் பலர் நடனக் கலைஞர்கள் இன்று(செப்.,22) நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். கர்பா நடனக்கலைஞர்களின் நாட்டியம் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பிரதமர் மோடியை புகழ்ந்து பாடலும் பாட உள்ளதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு பிரபலமான நவராத்திரி கலைஞர்களான நவராத்திரங்களின் தாண்டியா ராணி ஃபல்குனி பதக் மற்றும் கிஞ்சல் டேவ் ஆகியோர் அடுத்த சில நாட்களில் ஹூஸ்டனில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
latest tamil news


மோடி பயணத்தின் முதற்கட்டமாக, ஹூஸ்டன் நகரில் உள்ள ஹோட்டல் போஸ்ட் ஓக்கில் நடந்த எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவன தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மோடி பேசினார். கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும், வெளியுறவு செயலர் விஜய் கோக்லேயும் கலந்து கொண்டனர்.


latest tamil newsஇக்கூட்டத்தில் 16 நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா - ஹூஸ்டனுக்கு இடையே 4.3 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.இதன்மூலம் ஈரான் ஈராக்கை காட்டிலும் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து அதிக அளவிலான இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது.


latest tamil news


பிரதமர் மோடி தன் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாகவே கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான 20 பில்லியன் அமெரிக்க டாலர் வரிவிதிப்பு குறைப்பு அறிவிப்பினை வெளியிட்டார். இந்த வரிகுறைப்பு மூலம் அமெரிக்க நிறுவனங்களின் கவனத்தை இந்தியா ஈர்க்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில், செப்.25ல் ப்ளூம்பெர்க்கில் 40 நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வர்த்தக மாநாட்டில் மோடி கலந்து கொள்வார் என்பது குறிப்பிடதக்கது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் வெளியிட்ட செய்தி: ஹூஸ்டன் நகரில், எரிசக்தி துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய சந்திப்பு பலன் உள்ளதாக இருந்தது. எரிசக்தி துறையிலும், இந்தியா அமெரிக்கா இடையிலான முதலீடு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது எனக்கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-201920:41:31 IST Report Abuse
ஆப்பு அதானி குழும பங்குகளை வாங்கி குவிக்கவும் ஏற்கனவே பழவேற்காடு பகுதி நிலங்கள் 6000 ஏக்கர் வரை அதானிக்கு புது லீஸுக்கு குடுக்கப் போறதா நியூஸ் வந்தது.
Rate this:
Cancel
22-செப்-201918:44:17 IST Report Abuse
Syed Ghouse Basha எப்படியாது நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால் சரி!
Rate this:
Cancel
jagan - Chennai,இந்தியா
22-செப்-201917:24:32 IST Report Abuse
jagan தமிழகத்தில் எரிவாயு உற்பத்தியை அதிகமாக்கவும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X