பொது செய்தி

தமிழ்நாடு

சீனாவில் தங்கம் வென்ற சிவகாசி எஸ்.ஐ.,

Added : செப் 22, 2019
Advertisement
சீனா, தங்கம், சிவகாசி எஸ்.ஐ.,

ஸ்ரீவில்லிபுத்துார்: சீனாவில் நடந்த, உலக காவல் துறையினருக்கான, தடகள போட்டியில், சிவகாசி எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி, தங்கம் வென்றார்.

சிவகாசி, ஈஞ்சார் நடுவப்பட்டியைச் சேர்ந்தவர், கிருஷ்ணமூர்த்தி, 50; மாவட்ட நக்சல் தடுப்பு போலீஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார்.மராத்தான் மற்றும் வேக நடை போட்டியில், மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த, நுாற்றுக்கும் மேற்பட்டபோட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2017ல், சீனாவில் நடந்த, ஆசிய தடகள போட்டியில், நான்காவது இடம் பெற்றார்.தற்போது, சீனாவின் செங்குடு மாகாணத்தில், 77 நாடுகளை சேர்ந்த, உலக காவல் துறையினருக்கான தடகள போட்டி நடந்தது. இந்தியாவின் சார்பில், 50 பேர் பங்கேற்றனர்; அதில், தமிழக காவல் துறை சார்பில், கிருஷ்ணமூர்த்தி உட்பட, ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர்.

அதில், 5,000 மீ., வேக நடை போட்டியில் பங்கேற்ற, கிருஷ்ணமூர்த்தி, 29 நிமிடங்களில், அத்துாரத்தை கடந்து, முதலிடம் பெற்று, தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.நாடு திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, நேற்று, சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர், இ.பி.எஸ்.,யை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X