ஆகாயத்தில் தடுமாறிய விமானம்

Updated : செப் 22, 2019 | Added : செப் 22, 2019 | கருத்துகள் (14)
Advertisement
Air India, Aircraft, ஏர் இந்தியா, விமானம், விபத்து,

புதுடில்லி: ஏர் இந்தியாவின் ஏ.ஐ.,467 என்ற விமானம், டில்லியில் இருந்து விஜயவாடா சென்றது. அப்போது இடி மின்னலுடன் பெய்த மழையால் விமானம் சற்று தடுமாறியது. திடீர் தடுமாற்றத்தால் விமானத்தின் சில பகுதிகள் சேதமாகின. பயணிகளின் பொருட்கள் சரிந்து விழுந்தன. பெரிய விபத்து ஏதும் நேராமல் பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் பயணிகள் யாரும் காயமடையவில்லை என்றும், விமான கேபின் குழுவினர் மட்டும் லேசான காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போன்று டில்லியில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ஏர்இந்தியா விமானமும் தடுமாறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
28-செப்-201918:10:16 IST Report Abuse
ashak இதுக்கும் நேருதான் காரணமா?
Rate this:
Share this comment
Cancel
Nesan - JB,மலேஷியா
24-செப்-201908:51:15 IST Report Abuse
Nesan இந்தளவுக்கு பொருள்கள் இறைந்து கிடக்கிறது என்றால், விமானி சமாளித்த விதத்தை பாராட்டியே ஆகவேண்டும். ஒருமுறை இது போன்ற அனுபவம். விமானம் அப்படியே கீழே இறங்கி... மேலே எழுவதற்குள் அனைவரும், வாய்விட்டு கதறியதையும், அடிவயிற்றில் என்னவோ செய்ததையும் மறக்கவே முடிவதில்லை.... என்னதான் நாம் மிக, மிக முன்னேறி இருந்ததாலும். நம் முன்னோர்கள் கூறியது போலெ இயற்க்கை வெல்வது நம்கையில் இல்லேவே இல்லை. விமானிக்கு எனது பாட்டுகள்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-செப்-201900:14:39 IST Report Abuse
தமிழ்வேல் பயம் இருந்தால், கால்களை நன்கு பரப்பி சீட் பெல்ட்டுடன் அமர்ந்திருக்க வேண்டும். ""கண்களை மூடி க்கொண்டு நமது ஊரில் கரடுமுரடான ரோட்டில், காரில் உட்கார்ந்து செல்வதுபோல நினைத்துக்கொண்டு அதிலேயே மனதை செலுத்திவிட்டால்"" பயம் இருக்காது. செய்து பாருங்கள் அனுபவத்தில் சொல்கின்றேன்....
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
23-செப்-201906:30:36 IST Report Abuse
G.Prabakaran பலர் அச்சத்தில் உறைந்திருப்பர் இதயம் பலகீனமானவர்களின் இதயம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X